முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்கு வங்கத்தில் 7 ஆயிரம் வாக்குச் சாவடிகள் பதட்டம் நிறைந்தவை

வியாழக்கிழமை, 14 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி,ஏப்.14 - மேற்கு வங்கத்தில் 7 ஆயிரம் வாக்குச் சாவடிகள் பதட்டம் நிறைந்தவைகள் என்று தேர்தல் கமிஷன் கண்டறிந்துள்ளது. மேற்கு வங்காளத்தில் 294 உறுப்பினர்களை கொண்ட சட்டசபைக்கு 6 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 ம் தேதி நடக்கிறது. 294 தொகுதிகளில் ஆதி திராவிடர்களுக்கு 68 தொகுதிகளும், மலை ஜாதியினருக்கு 16 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 294 தொகுதிகளிலும் 51 ஆயிரத்து 919 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 7 ஆயிரம் வாக்குச் சாவடிகள் பதட்டம் நிறைந்தவைகளாக கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த தொகுதிகளில் வாக்குப் பதிவின் போது கலவரம் மற்றும் முறைகேடுகள் நடக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த பதட்டம் நிறைந்த வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பை பலப்படுத்த தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. மேற்கு வங்கத்தில் மொத்தம் 5 கோடியே 60 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 94.5 சதவீதம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை கொடுக்கப்பட்டு விட்டது. 32 மாநிலங்களை கொண்ட மேற்கு வங்கத்தில் 6 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 18, ஏப்ரல் 23, ஏப்ரல் 27, மே 3, மே 7,மே 10 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. ஓட்டு எண்ணிக்கை மே 13 ம் தேதி நடக்கிறது. 

ரெட்லைட் ஏரியா பகுதிகளில் வாக்களிப்பவர்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் தனி வாக்குச் சாவடி அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. நைடா மாவட்டத்தில் பாலியல் தொழிலாளர்களுக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும் தனியாக வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டத்தில் 2 கட்ட தேர்தலின் போது வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்