முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி நதிநீர் தமிழக முதல்வருடன் பேசி தீர்வுகாண கர்நாடகத்திற்கு உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 27 நவம்பர் 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,நவ.- 27 - காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 52.8 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடுவது குறித்து முதல்வர் ஜெயலலிதாவுடன் பேசி தீர்க்கும்படி கர்நாடக அரசுக்கு சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்தாண்டு தென்மேற்கு பருவ மழை குறையாக பெய்துள்ளது என்று கூறி கடந்த ஜூன் மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரை தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டிய 52.8 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிடாமல் இருக்கிறது. தண்ணீரை திறந்துவிடும்படி காவிரி ஆணையமும் காவரி கண்காணிப்பு குழுவும் உத்தரவிட்டும் கூட தண்ணீரை திறந்துவிட கர்நாடகம் மறுத்து வருகிறது. வடகிழக்கு பருவமழை மூலம் தமிழகத்திற்கு வரும் டிசம்பர் மாதம் முடிய மழை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றும் கர்நாடகம் சாக்குப்போக்கு கூறி வருகிறது. ஆனால் தமிழகத்தில் இதுவரை கடலோர மாவட்டங்களை தவிர இதர மாவட்டங்களில் மழை குறைவாகவே பெய்துள்ளது. இன்னும் ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், அணைகள் பெருகவில்லை. இது விவசாயிகளுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனை கருத்தில் கொண்டு கர்நாடக அரசு தர வேண்டிய 52.8 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாகவோ அல்லது வரும் ஜூன் மாதத்திலோ திறந்துவிடுவது குறித்து சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட வேண்டும் என்று கோரி தமிழக அரசு சார்பாக மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜெயின் தலைமையில் 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், கர்நாடக அரசுக்கு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டிய 52.8 டி.எம்.சி. தண்ணீர் குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாணும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 week ago