முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஜெயலலிதாவுடன் நாடார் சங்க தலைவர்கள் சந்திப்பு:

வியாழக்கிழமை, 29 நவம்பர் 2012      அரசியல்
Image Unavailable

சென்னை, நவ. - 29 - நாடார் சமூகத்தினரின் உணர்வுகளை உடனடியாக பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்ற முதலமைச்சர் ஜெயலலிதாவை, நேற்று தலைமைச் செயலகத்தில் நாடார் மகாஜன சங்கத்தைச் சார்ந்த உறுப்பினர்கள் நேரில் சந்தித்து தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர். மத்திய அரசு பாடத் திட்டத்தின்படி செயல்படும் சிபிஎஸ்இ பள்ளிகளில் 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் நாடார் சமூகத்தை பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துகள் இடம் பெற்றுள்ளதை அறிந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, அதனை nullநீக்கக் கோரி பாரதப் பிரதமருக்கு கடிதம் ஒன்றினை எழுதினார். அந்தக் கடிதத்தில், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள சிபிஎஸ்இ 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் நாடார் சமூகத்தினரை இழிவுப்படுத்தும் பல கருத்துக்கள் இடம் பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டி, அந்தத் தகவல்கள் தவறானவை என்றும், நாடார் சமூகத்தினர் கன்னியாகுமரி மாவட்டத்தின் nullர்வீக குடிமக்கள் என்றும், அவர்கள் தென்னிந்தியாவில் ஒரு கால கட்டத்தில் ஆட்சியாளராக இருந்துள்ளனர் என்றும், சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் நாடார்களின் பங்கு மகத்தானவை என்றும், கடின உழைப்பு மற்றும் மனஉறுதியால் கல்வி மற்றும் வியாபாரத் துறையில் அவர்கள் பெரும் வெற்றி பெற்றுள்ளனர் என்றும், இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த நாடார் சமூகத்தினர் பற்றி சிபிஎஸ்இ 9ஆம் வகுப்பு சமூகப் பாடத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் நாடார் சமூகத்தை பற்றி மாணவ, மாணவியரிடையே தவறான கருத்தினை ஏற்படுத்திவிடும் என்பதால், சர்ச்சைக்குரிய அப்பாடத்தை 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல், புத்தகத்திலிருந்து உடனடியாக nullக்க சம்பந்தப்பட்ட அமைச்சகத்துக்கு அறிவுறுத்த வேண்டும் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பாரதப் பிரதமரை கேட்டுக் கொண்டிருந்தார். நாடார் சமூகத்தினரின் உணர்வுகளை உடனடியாக பாரதப் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்ற தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை நேற்று (28.11.2012) தலைமைச் செயலகத்தில் நாடார் மகாஜன சங்கத்தைச் சார்ந்த உறுப்பினர்கள் நேரில் சந்தித்து தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர். இந்தச் சந்திப்பின் போது வனத்துறை அமைச்சர் கே.டி.பச்சைமால், தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி, நாடார் மஹாஜன சங்கத் தலைவர் ஆர்.முத்துச்சாமி, பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ், தெட்சிணமாற நாடார் சங்க துணைத் தலைவர் பீட்டர் ஜெபராஜ், கூடுதல் பொதுச் செயலாளர் மணிதங்கம், வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி தலைவர் டாக்டர்.பெரீஸ்.மகேந்திரவேல், நெல்லை தூத்துக்குடி நாடார் மகிமை பரிபாலன சபை தலைவர் பத்மநாபன், சென்னை வாழ் நாடார் சங்க பொதுச் செயலாளர் சின்னமணி நாடார், பொதுச் செயலாளர் தங்கமுத்து, தமிழ்நாடு நாடார் பேரவை இணைச் செயலாளர் மாரியப்பன், தமிழ்நாடு நாடார் பேரவை கொள்கை பரப்புச் செயலாளர் காமராஜ், மஉறாஜனம் இதழ் பொறுப்பாளர் கதிரவன், பாம்பே நாடார் சங்கத் தலைவர் ராஜா இளங்கோவன் மற்றும் திருவல்லிக்கேணி நாடார் சங்கத் தலைவர் ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 week ago