முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத்மாநில பாரதிய ஜனதாஅரசு தவறான செயல்களில் ஈடுபடுகிறது

புதன்கிழமை, 12 டிசம்பர் 2012      இந்தியா
Image Unavailable

சித்தபூர்,டிச.- 11 - குஜராத் மாநிலத்தில் முதல்வர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது என்று சோனியா காந்தி கடுமையாக குற்றஞ்சாட்டி உள்ளார்.  குஜராத் மாநிலத்தில் முதல்கட்ட சட்டசபை தேர்தலுக்கான இறுதி பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது. ஆளும் பாரதிய ஜனதாவுக்கும் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசுக்கும் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மன்மோகன் சிங் பிரசாரம் செய்தார். மேலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். குஜராத் மாநிலம் சித்தபூர் என்ற இடத்தில் காங்கிரஸ் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் சோனியா காந்தி கலந்துகொண்டு பேசினார். அப்போது முதல்வர் நரேந்திர மோடி மற்றும் அவரது தலைமையிலான பாரதிய ஜனதா அரசும் மீதும் கடுமையாக தாக்கி பேசினார். குஜராத் மாநில பாரதிய ஜனதா அரசு தவறான செயல்களில் ஈடுபட்டு வருகிறது. மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது என்றும் சோனியா கூறினார். குஜராத் மாநிலத்தில் மோடி அரசு காலத்தில் எந்தவித வளர்ச்சியும் ஏற்படவில்லை. குஜராத் மாநிலத்திற்கு தேவையான மின்சாரத்தை மத்திய அரசு கொடுத்து வருகிறது. அப்படி இருந்தும் மாநிலத்தில் இன்னும் 4.5 லட்சம் விவசாயிகள் இன்னும் அவர்களின் கிணறுகளுக்கு மின் இணைப்பு பெறவில்லை. கல்வி வளர்ச்சியும் இல்லை. சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். குஜராத் மாநிலத்தில் நாம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். மாநிலத்தை மீண்டும் வளர்ச்சி பாதைக்கு கொண்டுவர வேண்டும். இதற்கு வரும் சட்டசபை தேர்தலில் முதல்வர் நரேந்திர மோடிக்கு மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்றும் சோனியா காந்தி மேலும் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago