முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரான்பாக்சி மருந்துகளுக்கு தடை விதிக்க கோரி வழக்கு

புதன்கிழமை, 5 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூன். 6 - தரமற்ற பொருட்களைக் கொண்டு மருந்துகளை தயாரிப்பதாக பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான ரான்பாக்சி மீது சுப்ரீம் கோர்ட்டில் பொது நலன் மனு தாக்கல் செய்துள்ளது. நாட்டின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று, ரான்பாக்சி. சில தினங்களுக்கு முன், கலப்பட மருந்துப் பொருட்களை விற்பனை செய்ததற்காக, அமெரிக்க உணவு மற்றும் மருந்துப்பொருள் நிர்வாகம், ரான்பாக்சி நிறுவனத்திற்கு, 500 கோடி அமெரிக்க டாலர் அபராதம் விதித்தது. இதையடுத்து, மும்பையின் பிரபல மருத்துவமனைகள், ரான்பாக்சி மருந்துகளை பரிந்துரைப்பதை குறைத்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

ரான்பாக்சியின் தயாரிப்புகள் மற்றும் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ள பொருட்களில், ஆய்வு நடத்த, இந்திய மருத்துவக் கழகம், இந்திய மருந்துப் பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது.ரான்பாக்சி நிறுவனம், தன் தரத்தை உறுதிப்படுத்தும் வரை, தமிழ் நாட்டில், அந்நிறுவன மருந்துகளை பரிந்துரைப்பதை குறைத்துக் கொள்ளுமாறு, இந்திய மருத்துவக் கழகத்தின் தமிழ்நாடு பிரிவு, டாக்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரான்பாக்சி நிறுவனம் மருந்துகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தரக்குறைவான பொருட்களை கொண்டு ரான்பாக்சி நிறுவனம் மருந்துகளை உற்பத்தி செய்வதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், ரான்பாக்சி மருந்துகளுக்கு தடை விதிக்க நடவடிக்கை வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்