முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விண்வெளி ஆய்வகத்தில் ரோபோவுடன் ஜப்பான் வீரர் பேசினார்

சனிக்கிழமை, 21 டிசம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

டோக்கியோ, டிச.22 - சர்வதேச விண்வெளி ஆய்வகத்தில் ரோபோவுடன் ஜப்பான் வீரர் பேசினார். அமெரிக்கா, ஜப்பான் ரஷியா உள்பட 14 நாடுகள் இணைந்து விண்வெளியில் ஒரு ஆய்வுக் கூடம் அமைத்து வருகிறது. இது பூமியிலிருந்து 420 கி.மீ. தொலைவில் உள்ளது. ஆய்வக கட்டுமானப் பணிக்கான வீரர்கள் குழு சென்று வருகிறது. அங்கு ஜப்பானை சேர்ந்த கொய்சி வகாடசா எந்ற ராணுவ வீரர் சென்றுள்ளார். 

விண்வெளியில் அவருக்கு பேசுவததற்காக கிரோபா என்ற பேசும் ரோபோ அனுப்பப்பட்டுள்ளது. இது டோக்கியோ தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் வடிவமைக்கப்பட்டது. உலகிலேயே முதல் பேசும் ரோபோ என்ற பெருமையை இது பெற்றுள்ளது. பின்ட் அளவிலான இந்த ரோபோ  ஜப்பான் விண்வெளி வீரர் கொய்சி வகாடசாவுடன் பேசத் தொடங் கியது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி விண்வெளிக்கு கிறிஸ்துமஸ் தாத்தாவும் அனுப்பப்பட்டுள்ளது. அதன் தொப்பியை அணிந்த கிரோபோ ரோபோ விண்வெளி வீர்ர வகோடாவிசம் ஜப்பான் மொழியில் பேசியது.                         

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்