முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராசா - கனிமொழிக்கு எதிராக கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்

வெள்ளிக்கிழமை, 25 ஏப்ரல் 2014      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,ஏப்.26 - 2ஜி ஸ்பெக்டரம் முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

ரூ.1.76 லட்சம் கோடி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு, டெல்லி பாட்டியாலா ஹவுசில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த நிலையில், அமலாக்கத் துறை நேற்று குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி, ஸ்வான் டெலிகாம் புரொமோட்டார் ஷாகித் பால்வா ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளும் குற்றம்சாட்டவர்களில் ஒருவராக இடம்பெற்றுள்ளார்.

முன்னதாக, இந்த வழக்கில் மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் நீதிபதி ஓ.பி.சைனி முன்பு ஆஜராகி, வாக்குமூலம் அளிப்பதாக இருந்தது.

இந்த வழக்கு கடந்த திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது, ராசா, கனிமொழி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் அகர்வால், வாக்குமூலத்தை எழுத்து வடிவில் பதிவு செய்ய கூடுதல் அவகாசம் கேட்டார்.

நீதிமன்றம் தரப்பில் தரப்பட்டுள்ள 824 பக்கங்களில் உள்ள 1,718 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் மற்றும் தேர்தல் பிரச்சாரம் நடைபெறுவதால் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டார். அதற்கு சம்மதித்த நீதிபதி ஓ.பி.சைனி, இனிமேல் அவகாசம் கேட்க கூடாது என்று எச்சரித்து வழக்கினை ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்