முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராம்தேவ் உடல்நிலை விவகாரம் பா.ஜ. தலைவர்கள் எச்சரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஜூன்.- 12 - ராம்தேவ் உடல்நிலையில் திடீரென்று ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அது தேசிய பிரச்சினையாகிவிடும் என்று மத்திய அரசுக்கு பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளனர். ஊழல் மற்றும் கறுப்புப்பணத்திற்கு எதிராக பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரது உடல்நிலை மோசமானதையொட்டி டாக்டர்களின் ஆலோசனையின்பேரில் டேரா டூன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கேயும் நேற்று 7-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இந்தநிலையில் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்கள் கூட்டம் நேற்று டெல்லியில் உள்ள மூத்த தலைவர் எல்.கே. அத்வானி வீட்டில் நடைபெற்றது. பாரதிய ஜனதா தலைவர் நிதீன் கட்காரி, பாரதிய ஜனதா எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், பொதுச்செயலாளர் ஆனந்த் குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வரும் ராம்தேவ் உடல்நிலை குறித்து பெரும் கவலை தெரிவிக்கப்பட்டது. அவரது உடல்நிலையில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அது தேசிய பிரச்சினையாகிவிடும் என்று கடுமையாக எச்சரித்துள்ளனர். பாபா ராம்தேவ் உண்ணாவிரதத்தால் ஏற்பட்டுள்ள சூழ்நிலை குறித்தும் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்