முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிணைக்கைதியாக சிக்கியிருக்கும் இங்கிலாந்து நிருபர்!

வெள்ளிக்கிழமை, 19 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

லண்டன், செப்.20 - ஈராக் மற்றும் சிரியாவில் பல பகுதிகளை கைப்பற்றி இஸ்லாமிய தேசம் என்ற புதிய நாட்டை ஐஎஸ் தீவிரவாதிகள் அமைத்துள்ளனர். இவர்களின் வளர்ச்சியை தடுக்க தாக்குதல் நடத்தும் அமெரிக்கா அதர்கு துணை போகும் இங்கிலாந்தை மிரட்டி அவரது நாட்டு குடிமக்கள்களை பிணைக் கைதிகளாக்கி தலைதுண்டித்து கொலை செய்து வருகின்றனர்.

சிரியாவில் உள்நாட்டு போர் செய்திகளை திரட்டி வந்த அமெரிக்க பத்திரிக்கை நிருபர்கள் 2 பேரையும், இங்கிலாந்து தொண்டு நிறுவனத்தை சேர்ந்த சமூக சேவகர் டேவிட் ஹெய்ன்ஸ் ஆகிய 3 பேரையும் தலைதுண்டித்து படுகொலை செய்தனர். இவர்களின் வீடியோவை வெளியிட்டு சர்வதேச அளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தினர்.

இவர்களை தொடர்ந்து அடுத்தப்படியாக பிணைக்கைதிகளாக இங்கிலாந்தின் மற்றொருப்பத்திரிக்கை நிருபரையும் பிணைக் கைதியாக பிடித்து வைத்துள்ளனர். அவரது பெயர் ஜான் கேன்டில். இவர் சிரியாவில் நடைபெறும் உள்நாட்டு போர் செய்திகளை சேகரித்து அனுப்பிவந்தார். இவர்களை பிடித்து வைத்திருந்துள்ள தீவிரவாதிகள் அந்த வீடியோவை வெளியிட்டனர்.

அதற்கு லென்ட் மீயுவர்ஸ் என்ற பெயரிட்டுள்ளனர். அதில், மேற்கத்திய நாடுகளுக்கு அறை கூவல் விடுத்துள்ளனர். அந்த வீடியோ 3 நிமிடம் 20 வினாடிகள் ஓடக்கூடியது. யூ டியூப் இணையதளத்தில் வெளியான இதில் கேன்டைல் பேச்சும் இடம் பெற்றுள்ளது. அதில் நான் எனது அரசாங்கத்தால் கைவிடப்பட்ட நிலையில் இருக்கிறேன். எனது தலைவிதி தற்போது ஐஎஸ் தீவிரவாதிகள் கைகளில் உள்ளது. என்னிடம் இழப்பதற்கு ஒன்றும் இல்லை. ஆனால் சில உண்மைகளை வெளியிட விரும்புகிறேம். இவர்களிடம் சிக்கியிருக்கும் பிணைக் கைதிகளின் உயிரை காப்பாற்றுங்கள் என்று கூறியுள்ளார்.

ஏற்கெனவே 3 பேர் தலைதுண்டித்து கொல்லப்பட்ட நிலையில் அடுத்தப்படியாக இங்கிலாந்து தொண்டு நிறுவன ஊழியர் ஆலன் ஹென்னிங் என்பவரை கொலை செய்வதாக தீவிரவாதிகள் அறிவித்துள்ளனர். இதற்கு இங்கிலாந்தில் உள்ள 100 முஸ்லிம் மதகுருமார்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவரை விடுவிக்கும்படி தீவிரவாதிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்