முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்டார் குழுமத்துக்கு ச.கி. கவுன்சிலின் ஒளிபரப்பு உரிமை

திங்கட்கிழமை, 13 அக்டோபர் 2014      விளையாட்டு
Image Unavailable

 

துபய், அக்.14 - வரும் 2015 முதல் 2023-ம் ஆண்டு வரையிலான சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் இந்தியா நிறுவனமும், ஸ்டார் மத்திய கிழக்கு நிறுவனமும் பெற்றுள்ளன.

இதன் மூலம் இரண்டு டி-20 மற்றும் இரண்டு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை இந்நிறுவனங்கள் பெற்றுள்ளன. இந்த ஒளிபரப்பு உரிமையைக் கோரி மொத்தம் 17 ஒப்பந்தப் புள்ளிகள் ஐசிசிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.

துபாயில் நடைபெற்ற கூட்டத்தில் ஐசிசி பிசினஸ் கார்ப்பரேஷன் இம்முடிவை எடுத்தது" என ஐசிசி தலைவர் ஸ்ரீநிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். வரும் 2015-ம் ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பைப் போட்டியை ஒளிபரப்பும் உரிமை இஎஸ்பின் ஸ்டார் ஸ்போர்ட் நிறுவனத்திடம் உள்ளது. உலகக்கோப்பை போட்டியுடன் அதன் ஒளிபரப்பு உரிமை நிறை வடைகிறது.

புதிய ஒளிபரப்பு உரிமையைப் பெற்றுள்ளதன் மூலம், 2015-23-க்கு இடையிலான எட்டு ஆண்டுகளில், 2 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிகள் (2019, 2023) மற்றும் இரண்டு சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் (2017, 2021), இரண்டு டி-20 உலகக் கோப்பைப் போட்டிகள் (2016-2020) உட்பட 18 போட்டித் தொடர்களை ஒளிபரப்பும் உரிமையை ஸ்டார் குழுமம் பெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்