முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலியா ஓபன்: ஸ்வேரேவ்-ஐ வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் டொமினிக் தீம்

வெள்ளிக்கிழமை, 31 ஜனவரி 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிசில் டொமினிக் தீம் ஸ்வேரேவ் ஐ வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். 

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 2-வது அரையிறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் ஐந்தாம் நிலை வீரரான ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் 7-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வேரேவ் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.இருவரும் முன்னணி வீரர்கள் என்பதால் ஆட்டம் தொடங்கியதில் இருந்தே பரபரப்பாக சென்றது. முதல் செட்டை ஸ்வேரேவ் 6-3 எனக் கைப்பற்றினார். 

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 2-வது செட்டை டொமினிக் தீம் 6-4 எனக் கைப்பற்றினார்.3-வது செட்டில் இருவரும் கடுமையாக போராடினர். ஆட்டம் சமநிலை பெற்றதால் டை-பிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் 7-3 என டொமினிக் தீம் கைப்பற்றினார். 4-வது செட்டும் டை-பிரேக்கர் வரை சென்றது. இதையும் 7-4 எனக் கைப்பற்றி டொமினிக் தீம் 3-6, 6-4, 7(7)-6(3), 7(7)-6(4) என வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.2-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் இறுதிப் போட்டியில் டொமினிக் தீம் - ஜோகோவிச் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து