முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா இன்று டெல்லி செல்கிறார்

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.- 4 - தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று காலை டெல்லி செல்கிறார். அங்கு திட்ட கமிஷன் துணைத் தலைவரைச் சந்தித்து 2012-13 ஆண்டுக்கு தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கும் படி கேட்டுக் கொள்வார் என்று தெரிகிறது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:- தமிழக முதல்வர் இன்று காலை சென்னையிலிருந்து டெல்லி புறப்படுகிறார். அங்கு மத்திய திட்ட கமிஷன் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியாவை, சந்தித்து தமிழகத்திற்கு 12-வது 5-ஆண்டு திட்டத்தில் 2012-13-வது ஆண்டுக்கு அதிக நிதி ஒதுக்கும் படி கேட்டுக் கொள்வார் என்று தெரிகிறது.

முதல்வர் ஜெயலலிதா இன்று மாலை டெல்லியிலிருந்து சென்னை திரும்புகிறார். இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்