முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

27 ஓவர்கள் தாக்குப்பிடித்து ஷுப்மான் கில்-ரோகித் சர்மா ஜோடி சாதனை

வெள்ளிக்கிழமை, 8 ஜனவரி 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

சிட்னி : ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் சிட்னியில் நடைபெற்று வருகிறது. நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 338 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. 

ஷுப்மான் கில், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், ஹசில்வுட், நாதன் லயன் ஆகியோரின் பந்து வீச்சை திறமையாக இந்த ஜோடி எதிர்கொண்டது. 

27 ஓவர்கள் வரை இந்த ஜோடி களத்தில் நின்றது. 27-வது ஓவரின் கடைசி பந்தில் ரோகித் சர்மா 26 ரன்களில் ஆட்டமிழந்தார். 

27 ஓவர்கள் களத்தில் நின்றதன் மூலம் இந்திய டெஸ்ட் அணி வெளிநாட்டில் விளையாடும்போது, 2010-ம் ஆண்டுக்குப்பின் அதிக நேரம் தாக்குப்பிடித்த ஜோடி என்ற பெருமையை ஷுப்மான் கில்- ரோகித் சர்மா பெற்றுள்ளனர். மேலும் 14 இன்னிங்சில் முதல் அரைசதம் அடித்த ஜோடியும் இதுவாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து