எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சேலம் : அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை முழுக்க முழுக்க மக்களுக்கு பலன் அளிக்கின்ற அறிக்கை என்றும் மக்களின் இதர கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சேலம் மாவட்டம், எடப்பாடியில் வேட்புமனு தாக்கல் செய்த பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
புரட்சித் தலைவி அம்மா 1989-ஆம் ஆண்டு எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட எனக்கு வாய்ப்பு வழங்கி, சேவல் சின்னத்தில் போட்டியிட்டு நான் வெற்றி பெற்றேன். அதிலிருந்து தொடர்ந்து எனக்கு பல வாய்ப்புகளை அம்மா அளித்து, அவர்களின் மாபெரும் மக்கள் செல்வாக்கோடு வெற்றி பெற்று எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு திட்டங்களை நான் செயல்படுத்தியிருக்கின்றேன்.
அம்மா எனக்கு சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக, கழகத்தில் பல்வேறு பொறுப்புகளை வழங்கி, எனக்கு வாய்ப்பைக் கொடுத்து, எடப்பாடி சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு பல நன்மைகள் செய்வதற்கு அவர்களின் ஆசியோடு ஒரு அரிய வாய்ப்பை தந்தார்கள். அந்த வாய்ப்பின் மூலமாக எடப்பாடி தொகுதி ஏற்றம் பெற, மக்களுக்கு கிடைக்க வேண்டிய நன்மைகள் முழுமையாக கிடைப்பதற்கு நான் அரும்பாடு பட்டுள்ளேன் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
கேள்வி: சிலிண்டர் விலையை குறைக்க வேண்டுமென்று ஏற்கனவே கோரிக்கைகள் வைத்தார்கள். இப்போது, தேர்தல் நேரத்தில் நீங்கள் 6 சிலிண்டர் இலவசமாக வழங்கப்படுமென்று அறிவித்துள்ளது மக்கள் மத்தியில் பெரிதாக எடுபடவில்லை என்ற குற்றச்சாட்டை வைக்கின்றனரே?
பதில்: மக்கள் மன்றத்தில் எடுபடுகிறதா? இல்லையா? என்பது தேர்தல் முடிவில் தெரியும். தேர்தலில் அ.தி.மு.க. தலைமையால் அறிவிக்கப்பட்ட தேர்தல் அறிக்கை மக்கள் மகிழ்ச்சி கொள்ளக்கூடிய அறிக்கையாக உள்ளது. பல்வேறு அடித்தட்டு மக்களிலிருந்து உயர் தரப்பு மக்கள் வரையில் இந்தத் தேர்தல் அறிக்கையை வரவேற்றுள்ளார்கள். பல சமூக ஆர்வலர்களும், வேளாண் பெருமக்களும் வியாபார பெருமக்களும், பல்வேறு தரப்பினரும் வரவேற்கிறார்கள்.
கேள்வி: ஏற்கனவே 6 இலட்சம் கோடி கடன் சுமை இருக்கும்போது இது சாத்தியமா? என்று தினகரன் கேட்டுள்ளாரே?
பதில்: இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் கடன் இருந்து கொண்டுதான் இருக்கிறது, எந்த மாநிலத்தில் கடன் இல்லை? ஆனால், வளர்ச்சிப் பணிகள் தொய்வின்றி நடைபெற்றுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
கேள்வி: அ.தி.மு.க. கூட்டணியின் பலம் எவ்வாறு உள்ளது?
பதில்: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணியாக உள்ளது.
கேள்வி: இந்தத் தொகுதியில் எதை முன்னிறுத்தி நீங்கள் வாக்கு சேகரிப்பீர்கள்?
பதில்: மக்கள் வைத்த கோரிக்கைகள் பெரும்பாலானவற்றை நான் ஏற்கனவே நிறைவேற்றியுள்ளேன். இன்னும் தேர்தல் நேரத்தில் பல கோரிக்கைகள் வருமென்று எதிர்பார்க்கின்றேன். அவ்வாறு வரப்பெற்ற கோரிக்கைகள் அனைத்தும் முழுமையாக நிறைவேற்றப்படும். நான் ஏற்கனவே சட்டமன்ற வேட்பாளராக இந்தத் தொகுதியில் போட்டியிட்டபோது இந்தத் தொகுதி மக்கள், அவர்களின் குழந்தைகள் குறைந்த கட்டணத்தில் உயர்கல்வி கற்க வேண்டுமென்று வைத்த கோரிக்கையின் அடிப்படையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, பி.எட். கல்லூரி கொண்டு வந்து ஏழை குடும்பங்களில் பிறந்த மாணவ, மாணவிகள் உயர்கல்வி படிக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கித் தந்துள்ளேன்.
நல்ல சாலை வசதிகளை செய்து கொடுத்துள்ளேன். கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட காவேரி தண்ணீரை வழங்கியிருக்கின்றேன். அதிகமான அம்மா மினி கிளினிக் திறந்து அந்தந்தப் பகுதிகளிலேயே மருத்துவ சிகிச்சை கிடைக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கியுள்ளேன். பல ஆரம்ப சுகாதார நிலையங்கள், பல கால்நடை மருந்தகங்கள், கிளை மருந்தகங்கள், அதிகமான நியாய விலைக் கடைகள் திறந்துள்ளேன். அங்கன்வாடி மையத்திற்கு புதிதாக கட்டடம் கட்டிக் கொடுத்துள்ளேன். ஆரம்பப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன.
நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தியுள்ளேன். கிராமச் சாலைகளிலிருந்து நெடுஞ்சாலை வரை சிறப்பான சாலைகளை அமைத்துக் கொடுத்துள்ளேன். இந்தத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக நான் வெற்றி பெற்று, அமைச்சராகி, முதலமைச்சரானவுடனேயே மக்கள் வைத்த கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக ஏறத்தாழ 19 வழித்தடங்களில் பேருந்துகளை இயக்கி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளேன். எடப்பாடிக்கு புறவழிச்சாலை, மின் கோட்டப் பொறியாளர் அலுவலகம், நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளர் அலுவலகம் கொடுத்துள்ளேன். மக்கள் வைத்த கோரிக்கைகள் அனைத்தும் எனது தலைமையிலான அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கேள்வி : சி.ஏ.ஏ தொடர்பாக தேர்தல் அறிக்கையில் அறிவித்திருக்கிறீர்கள், ஆனால், பி.ஜே.பி.-யில் இருக்கக்கூடிய ரவி இது சாத்தியமில்லை என்று அறிவித்திருக்கிறாரே?
பதில்: மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று நான் ஏற்கனவே சொன்னேனே. எங்களுடைய அரசு, மத்திய அரசை வலியுறுத்தும் என்று தான் தெரிவித்திருக்கிறேன். சிறுபான்மை மக்களை பாதுகாக்கக்கூடிய அரசு அம்மாவினுடைய அரசு. அதன் வழியிலே சிறுபான்மை மக்கள் வைத்த கோரிக்கையை எங்களுடைய அரசு, மத்தியிலே வலியுறுத்தும்.
ஒட்டுமொத்த கழகத்தின் நிர்வாகிகள், துணை முதலமைச்சர், நானும் ஒன்றாக இணைந்து ஒட்டுமொத்த மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கின்ற விதமாக, எங்களுடைய மூத்த கட்சித் தலைவர்கள் , மூத்த அமைச்சர்கள், கழக ஒருங்கிணைப்பாளர் அண்ணன் ஓ.பி.எஸ் அவர்கள் எல்லோரும் இணைந்து இந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கின்றோம். இது, மக்களுக்கு முழுக்க முழுக்க பயனளிக்கின்ற தேர்தல் அறிக்கை.
கேள்வி: எடப்பாடி தொகுதிக்கு என்னென்ன திட்டங்களை செய்யவுள்ளீர்கள்?
பதில்: மக்கள் என்ன கோரிக்கை வைக்கிறார்களோ, அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். அது மட்டுமல்ல, எடப்பாடி சட்டமன்றத் தொகுதி வறட்சியான பகுதி, அந்த வறட்சியான பகுதிகளிலிருக்கின்ற ஏரிகள் மற்றும் குளங்களில் நீர் நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். எடப்பாடி சட்டமன்றத் தொகுதி மக்களுடைய கோரிக்கைகயை ஏற்று, வறண்ட ஏரிகளில் நீர் நிரப்புவதற்கு, மேட்டூர் உபரிநீர் வெளியேறுகின்றபோது, அந்த நீரை நீரேற்று முறை மூலமாக எடப்பாடி, சங்ககிரி, மேட்டூர், ஓமலூர் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளில் இருக்கும் வறண்ட ஏரிகள் நிரப்பப்படும் என்ற அறிவிப்பை நான் வெளியிட்டேன்.
அந்தத் திட்டத்திற்கு நானே நேரடியாக வந்து அடிக்கல் நாட்டியது மட்டுமல்லாமல் தற்போது அந்தத் திட்டத்தையும் துவக்கி வைத்திருக்கின்றேன். 100 ஏரிகள் நிரம்புகின்றபோது, இந்த சட்டமன்றத் தொகுதியிலுள்ள விளை நிலங்கள், வேளாண் பெருமக்கள் பயனடைவார்கள். மேலும், பொதுமக்களுக்கு குடிப்பதற்கு தேவையான நீர் கிடைக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 4 weeks ago |
-
மாநில உரிமைக்காக குரல் கொடுக்கக்கூடிய இரும்பு மனிதர் தமிழக முதல்வர் ஸ்டாலின் : அன்புமணிக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி
24 Feb 2025சென்னை : மத்திய அரசிடம் மாநில உரிமைக்காக குரல் கொடுக்கக்கூடிய இரும்பு மனிதராக முதல்வர் இருக்கிறார் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
-
அரசு பொதுத் தேர்வை முன்னிட்டு அடுத்த 2 மாதங்கள் மின்தடை இருக்காது: தமிழக மின்சார வாரியம் அறிவிப்பு
24 Feb 2025சென்னை, மாணவர்கள் அரசு பொதுத் தேர்வு எழுதுவதை முன்னிட்டு, அடுத்த 2 மாதங்களுக்கு மின்தடை செய்யக் கூடாது என பொறியாளர்களுக்கு, மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
-
தென்காசி மாவட்டத்துக்கு 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை
24 Feb 2025கன்னியாகுமரி : சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி அவதார நாளையொட்டி நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தைத் தொடர்ந்து தென்காசி மாவட்டத்திற்கு வருகிற 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறி
-
தர்மபுரி அருகே பயங்கரம்: பட்டாசுகிடங்கில் தீ விபத்து: 3 பெண்கள் பரிதாபமாக பலி
24 Feb 2025தர்மபுரி : தர்மபுரி அருகே பட்டாசு கிடங்கி பயங்கிர தீ விபத்து ஏற்பட்டது, இதில் 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் இன்று கூடுகிறது 2025-26-ம் ஆண்டு பட்ஜெட் குறித்து ஆலோசனை
24 Feb 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் கூடுகிறது.
-
தமிழகத்தில் வரும் 28-ம் தேதி ஒன்பது மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
24 Feb 2025சென்னை : தமிழகத்தில் வருகிற 28-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் வழங்குவதே அரசின் நோக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
24 Feb 2025சென்னை, தமிழகத்தில் ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்க வேண்டும் என்பதே நோக்கம் என்று முதல்வர் மருந்தகம் திட்டத்தை துவக்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்ட
-
இரட்டை இயந்திர அரசிலால் ம.பி. வளர்ச்சியின் வேகத்தை இரட்டிப்பு : பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
24 Feb 2025போபால் : மாநிலத்தில் இரட்டை இயந்திர அரசு அமைக்கப்பட்ட பிறகு மத்திய பிரதேசத்தின் வளர்ச்சியின் வேகம் இரட்டிப்பாகியுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
-
அ.தி.மு.க.வின் தோல்விக்கு ஒற்றை தலைமையே காரணம் : ஓ.பன்னீர் செல்வம் குற்றச்சாட்டு
24 Feb 2025சென்னை : அனைத்து தேர்தல்களிலும் அ.தி.மு.க. தோல்வியை சந்திக்க ஒற்றைத் தலைமையே காரணம் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்.
-
அரசு பள்ளிகளுக்கான இணைய கட்டணம்: தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை புதிய முடிவு
24 Feb 2025சென்னை : அரசு பள்ளிகளுக்கான இணைய சேவைக் கட்டணம் நேரடியாக செலுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப பெற்றோர் அஞ்சுகின்றனர்: இ.பி.எஸ்.
24 Feb 2025சென்னை : அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கான பாதுகாப்பு சிறப்பாக இருந்தது. தி.மு.க.
-
போட்டியை கட்டுப்படுத்துவதே அணியில் என்னுடைய வேலை: விராட் கோலி வெளிப்படை
24 Feb 2025துபாய் : அதிகப்படியான ரிஸ்க் இல்லாமல் போட்டியை கடைசி வரை கட்டுப்படுத்துவதே அணியில் என்னுடைய வேலை என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
-
கோலி- கில் ஜோடி அபார ஆட்டம்: தோல்வி குறித்து பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான்
24 Feb 2025துபாய் : கோலி- கில் ஜோடி ஆட்டத்தை தங்களிடம் இருந்து பறித்து விட்டதாக பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் கூறினார்.
துபாயில்...
-
தங்கம் விலை தொடர்ந்து உயர்வு
24 Feb 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ. 80 உயர்ந்து விற்பனையானது.
-
மகா கும்பமேளாவில் புனித நீராடினார் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர்
24 Feb 2025பிரயாக்ராஜ் : பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனது குடும்பத்தினருடன் புனித நீராடினார்.
-
தமிழகத்தில் மும்மொழிக்கொள்கையை யாராலும் புகுத்த முடியாது: அமைச்சர்
24 Feb 2025விழுப்புரம் : மும்மொழி கொள்கையை தமிழகத்தில் யாராலும் புகுத்த முடியாது என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
-
உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: சிறுநீரக பிரச்சினையால் போப் பிரான்சிஸ் அவதி
24 Feb 2025ரோம் நகர் : போப் பிரான்சிஸ் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வாடிகன் தெரிவித்துள்ளது.
-
நாம் தமிழர் கட்சியிலிருந்து காளியம்மாள் திடீர் விலகல்
24 Feb 2025சென்னை : நாம் தமிழர் கட்சியிலிருந்து காளியம்மாள் விலகினார்.
-
77-வது பிறந்த நாள் விழா: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிலைக்கு இ.பி.எஸ். மாலை அணிவித்து மரியாதை
24 Feb 2025சென்னை, 77-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிலைக்கு இ.பி.எஸ். மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் அ.தி.மு.க.
-
ஜெர்மனில் சட்டவிரோத குடியேறிகள் மீது நடவடிக்கை: தேர்தலில் வெற்றிப்பெற்ற ப்ரெட்ரிக் மெர்ஸ் அறிவிப்பு
24 Feb 2025ஜெர்மன் : ஜெர்மன் பொதுத் தேர்தலில் கன்சர்வேடிவ் கூட்டணியின் தலைவரான ப்ரெட்ரிக் மெர்ஸ் வெற்றி பெற்றுள்ளார்.
-
மாநில எல்லைகளில் அரிசி கடத்தலை தடுக்க கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தல்
24 Feb 2025சென்னை, மாநில எல்லையோரங்களில் அரிசிக் கடத்தலைத் தடுத்திட கண்காணிப்புப் பணியைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று உணவுத்துறை உயர் அலுவலர்களின் ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் சக
-
தலைவர்கள் படங்கள் அகற்றப்பட்டதாக புகார்: டெல்லி சட்டசபை முதல் நாள் கூட்டத்தில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளி
24 Feb 2025புதுடெல்லி : டெல்லி முதல்வர் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர் மற்றும் பகத் சிங் ஆகியோரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு உள்ளதாக கூறி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை
-
ஜெ. நினைவுகள் என்றென்றும் மக்களின் மனதில் நிறைந்திருக்கும் : நடிகர் ரஜினிகாந்த் புகழஞ்சலி
24 Feb 2025சென்னை : ஜெயலலிதா மறைந்தாலும் அவருடைய நினைவுகள் என்றென்றும் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
-
சுரங்கத்தில் சிக்கியவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை: தெலங்கானா அமைச்சர் தகவல்
24 Feb 2025ஐதராபாத், சுரங்க இடிபாடுகளில் சிக்கியவர்கள் 8 பேரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று தெலங்கானா அமைச்சர் கிருஷ்ண ராவ் தெரிவித்துள்ளார்.
-
முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
24 Feb 2025சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 5-ஆவது ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.