முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்காசி மாவட்டத்துக்கு 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை

திங்கட்கிழமை, 24 பெப்ரவரி 2025      தமிழகம்
Ayya-Vaikundasamy 2024-01-1

Source: provided

கன்னியாகுமரி : சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி அவதார நாளையொட்டி நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தைத் தொடர்ந்து தென்காசி மாவட்டத்திற்கு வருகிற 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் சாமித்தோப்பில் அமைந்துள்ள அய்யா வைகுண்டசாமி அவதார நாளன்று தலைமைப்பதிக்கு கன்னியாகுமரி மற்றும் அதன் அண்டை மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்ககளிலும் தமிழகம் முழுவதிலுமிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமித்தோப்புக்கு வருகை தருவர். இந்த நிலையில், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகிற 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்திற்கும் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தன. அதன்படியே, வருகிற 4-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத்தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் கூறியுள்ளார்.

மேற்குறிப்பிட்ட நாளில் அரசு பொதுத்தேர்வுகள் ஏதேனுமிருப்பின் சம்பந்தப்பட்ட தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், மற்றும் பொதுத்தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது எனவும், மேலே குறிப்பிட்டுள்ள உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 15-ம் தேதி அன்று தென்காசி மாவட்டத்திற்கு வேலை நாள் என்றும் அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து