முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

திங்கட்கிழமை, 24 பெப்ரவரி 2025      விளையாட்டு
CM 2024-05-31

Source: provided

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 5-ஆவது ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது. முதலில் பாகிஸ்தான் 241 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழக்க, இந்தியா 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்து வென்றது. இந்திய தரப்பில் பௌலிங்கில் குல்தீப் யாதவ், ஹா்திக் பாண்டியா சிறப்பாக செயல்பட, பேட்டிங்கில் விராட் கோலி சதம் விளாசி அசத்தினாா். ஷ்ரேயஸ் ஐயா், ஷுப்மன் கில்லும் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினா். போட்டியில் தற்போது தொடா்ந்து இரு வெற்றிகளைப் பதிவு செய்துள்ள இந்தியா, அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது.

இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றிபெற்ற இந்திய அணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், சதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்ட விராட் கோலிக்கு வாழ்த்துகள். சாம்பியன்ஸ் கோப்பையை வெல்ல இதே உத்வேகத்தோடு செயல்படுங்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.  இதேபோல் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் அமித்ஷா, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் இந்திய அணிக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

_________________________________________________________________________________________

ஹர்திக் பாண்ட்யா வாட்ச் 

துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 5வது போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. துவக்கம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பாகிஸ்தான் அணியின் முதல் விக்கெட்டை ஹர்திக் பாண்ட்யா எடுத்தார். நேற்றைய போட்டியில் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 8 ஓவர்கள் பந்துவீசிய ஹர்திக் பாண்ட்யா வெறும் 31 ரன்களை மட்டுமே கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்பிறகு பேட்டிங்கின் போது பாண்ட்யா 6 பந்துகளில் 8 ரன் எடுத்த அவுட் ஆனார்.

இந்த நிலையில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது ஹர்திக் பாண்ட்யா அணிந்திருந்த வாட்ச் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி இருக்கிறது. அதன்படி ஹர்திக் பாண்டயா நேற்றைய போட்டியின் போது அணிந்திருந்த வாட்ச்-இன் விலை 8 லட்சம் டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 6.92 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. உலகளவில் மிகவும் பெயர்பெற்ற அந்த வாட்ச்-ஐ காண்பது அரிது. இந்த வாட்ச் உண்மையில் புகழ்பெற்ற டென்னிஸ் வீரர் ரபேல் நடாலுக்காக உருவாக்கப்பட்டது. இந்த வாட்ச் மொத்தத்தில் 50 யூனிட்கள் மட்டுமே உருவாக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. சிறப்பான பந்துவீச்சு மற்றும் ஆடம்பர வாட்ச் தவிர்த்து நேற்றைய போட்டியில் வைத்து ஹர்திக் பாண்ட்யா சர்வதேச போட்டிகளில் 200 விக்கெட்டுகள் எனும் மைல்கல்லை கடந்தார்.

_________________________________________________________________________________________

விராட் கோலியின் புதிய சாதனை 

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் துபாயில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் ஆடிய பாகிஸ்தான் 241 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து ஆடிய இந்தியா விராட் கோலியின் பொறுப்பான ஆட்டத்தால் 244 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், அரையிறுதிக்கு முன்னேறியது. விராட் கோலி சதம் விளாசி அசத்தினார். நேற்றைய போட்டியில் ஆட்ட நாயகன் விருதை விராட் கோலி வென்றார்.

இந்நிலையில், ஐ.சி.சி தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக 5 முறை ஆட்ட நாயகன் விருதை வென்று விராட் கோலி வரலாற்று சாதனை படைத்துள்ளார். அதன்படி, 2012 டி20 உலகக்கோப்பை, 2015 உலகக் கோப்பை ஒருநாள் போட்டி, 2016 டி20 உலகக் கோப்பை, 2022 டி20 உலகக் கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபி ஆகிய ஐசிசி தொடரில் ஆட்ட நாயகன் விருது பெற்றுள்ளார்.

_________________________________________________________________________________________

பயங்கரவாதிகள் திடீர் அச்சுறுத்தல்

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. 1996 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக பாகிஸ்தான் ஐ.சி.சி. தொடரை நடத்துகிறது. 1996 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை அந்நாடு நடத்தியது. அதன் பிறகு பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக அந்நாட்டில் ஐ.சி.சி. கிரிக்கெட் தொடர்கள் நடைபெறாமல் இருந்தது. கிரிக்கெட் அணியினர் தங்கும் ஓட்டல்களில் உயர் கமாண்டோ பிரிவுகள் உட்பட 10,000 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின்  தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான மொஹ்சின் நக்வி, போட்டிக்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தனிப்பட்ட முறையில் மேற்பார்வையிட்டு வருகிறார். இந்நிலையில், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை பார்க்க வரும் வெளிநாட்டு ரசிகர்களை கடத்த  பயங்கரவாத அமைப்பு ஒன்று திட்டம் போட்டுள்ளதாக பாகிஸ்தான் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

_________________________________________________________________________________________

ஷமியின் மோசமான சாதனை 

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 5-ஆவது ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது. முதலில் பாகிஸ்தான் 241 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழக்க, இந்தியா 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்து வென்றது. இந்திய தரப்பில் பௌலிங்கில் குல்தீப் யாதவ், ஹா்திக் பாண்டியா சிறப்பாக செயல்பட, பேட்டிங்கில் விராட் கோலி சதம் விளாசி அசத்தினாா். ஷ்ரேயஸ் ஐயா், ஷுப்மன் கில்லும் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினா்.

முன்னதாக இப்போட்டியில் முதல் ஓவர் வீசிய முகமது ஷமி அந்த ஓவரில் 5 வைடு பந்துகளை வீசினார். இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் ஒரு ஓவரில் அதிகபட்ச பந்துகள் (11) வீசிய இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை இர்பான் பதான் மற்றும் ஜாகீர் கான் உடன் முகமது ஷமி சமன் செய்துள்ளார். 2003 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஜாகீர் கான் ஒரு ஓவரில் 11 பந்துகளும் 2006 ஆம் ஆண்டு இர்பான் பதான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு ஓவரில் 11 பந்துகளும் வீசி இந்த மோசமான சாதனையை படைத்துள்ளனர்.

_________________________________________________________________________________________

படேலுக்கு இம்பேக்ட் வீரர் விருது 

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது.  துபாயில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. 

முன்னதாக ஐ.சி.சி. தொடர்களில் ஒவ்வொரு போட்டியிலும் பீல்டிங் துறையில் சிறந்து விளங்கும் இந்திய வீரருக்கு பி.சி.சி.ஐ. 'இம்பேக்ட் பீல்டர் விருது' வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி இந்த போட்டிக்கான சிறந்த பீல்டராக ஆல்ரவுண்டர் அக்சர் படேல் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு இந்த விருதை இந்திய முன்னாள் வீரர் ஷிகர் தவான் வழங்கி கவுரவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து