முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகா கும்பமேளாவில் புனித நீராடினார் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர்

திங்கட்கிழமை, 24 பெப்ரவரி 2025      இந்தியா
Gyanesh-Kumar-chief Election Commissioner-

Source: provided

பிரயாக்ராஜ் : பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனது குடும்பத்தினருடன் புனித நீராடினார்.

உலக அளவில் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் கூடும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து வந்தும் ஏராளமானோர் புனித நீராடி வருகின்றனர். கும்பமேளாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 60 கோடி பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளதாக உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவில் முக்கிய தலைவர்கள் பலரும் நீராடி வருகின்றனர். அந்தவகையில் சமீபத்தில் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக பதவியேற்ற ஞானேஷ் குமார் தனது குடும்பத்தினருடன் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். தனது பெற்றோர், மனைவி உள்ளிட்ட குடும்பத்தினருடன் வந்துள்ளதாகவும் திரிவேணி சங்கமத்தில் நீராடியது உணர்வுப்பூர்வமாக இருந்ததாகவும் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து