முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். போட்டியை லண்டனில் நடத்த மேயர் சாதிக்கான் விருப்பம்

சனிக்கிழமை, 10 ஏப்ரல் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

லண்டன் : ஐ.பி.எல் போட்டியை லண்டனில் நடத்த வேண்டும் என லண்டன் மேயர் சாதிக் கான் விருப்பம் தெரிவித்துள்ளார். இதன் மூலம் லண்டனுக்கு மட்டுமல்ல இங்கிலாந்தின் இதர கிரிக்கெட் மைதானங்களுக்கும் பயனுள்ளதாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா சூழல் காரணமாக கடந்த வருட ஐ.பி.எல் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த வருடப் போட்டி இந்தியாவிலேயே நடத்தப்படுகிறது. சென்னை, மும்பை, கொல்கத்தா, ஆகமதாபாத், டெல்லி, பெங்களூர் ஆகிய ஆறு நகரங்களில் ஐ.பி.எல் போட்டி நடைபெறவுள்ளது. கொரோனா தொற்று அச்சம் காரணமாக, தொடக்க நிலை ஆட்டங்களில் ரசிகா்களுக்கு அனுமதி கிடையாது. 

ஐ.பி.எல் 2021 போட்டி நேற்று முன்தினம் முதல் சென்னையில் தொடங்கியது. முதல் ஆட்டத்தில் மும்பையை வீழ்த்தியது பெங்களூர் அணி.  இந்நிலையில் ஐ.பி.எல் போட்டியை லண்டனில் நடத்த வேண்டும் என லண்டன் மேயர் சாதிக் கான் விருப்பம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் ஒரு பேட்டியில் கூறியதாவது:

ஐ.பி.எல் போட்டியை லண்டனில் நடத்த ஆர்வமாக உள்ளேன். இதன்மூலம் உலகின் விளையாட்டுத் தலைநகரமாக லண்டன் விளங்கும். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் மட்டுமல்ல ஐ.பி.எல் போட்டியில் விளையாடும் கோலியையும் லண்டனில் காண விரும்புகிறேன். பெங்களூர் அணி கேப்டனாக கோலியையும் சென்னை கேப்டனாக தோனியையும் மும்பை கேப்டனாக ரோஹித் சர்மாவையும் இங்கு காண ஆர்வமாக உள்ளேன். 

ஐ.பி.எல் நிர்வாகத்திடமும் ஐ.பி.எல் அணிகளிடமும் இதுகுறித்துப் பேசி வருகிறோம். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மற்றும் மற்றவர்களிடமும் பேசி இந்தக் கனவை நிறைவேற்ற விரும்புகிறேன். இதனால் லண்டனுக்கு மட்டுமல்ல இங்கிலாந்தின் இதர கிரிக்கெட் மைதானங்களுக்கும் பயனுள்ளதாக அமையும். ஐ.பி.எல் போட்டியை லண்டனில் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார்கள். இந்தியாவுக்கு லண்டனையும் லண்டனுக்கு இந்தியாவையும் மிகவும் பிடிக்கும். இதனால் இரு தரப்புக்கும் பலன் கிடைக்கும் என்று கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து