Idhayam Matrimony

மும்பை அருகே கப்பல் மூழ்கியதில் மாயமானவர்களை தேடும் பணி தீவிரம்

வியாழக்கிழமை, 20 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

மும்பை : மும்பை அருகே தக்தே புயலால் நடுக்கடலில் அடித்து செல்லப்பட்டு எண்ணெய் துரப்பண கப்பல் மூழ்கியதில் 26 பேர் பலியானார்கள். மேலும் மாயமான 49 பேரை தேடும் பணி நடந்து வருகிறது.

அரபிக்கடலில் உருவான தக்தே புயல் கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு குஜராத்தில் கரையை கடந்தது. இந்த புயல் மராட்டியம், குஜராத், கர்நாடக மாநிலங்களில் பெரும்சேதத்தை ஏற்படுத்தி பலரின் உயிரையும் பறித்தது. இந்த பேய் புயல் மும்பை அருகே நடுக்கடலில் எண்ணெய் துரப்பண பணிகளில் (எண்ணெய் எடுக்கும் பணி) ஈடுபட்டு இருந்த கப்பல்களையும் பதம் பார்த்தது.  இதில் மும்பையின் தென்மேற்கு பகுதியில் இருந்து 70 கி.மீ. தொலைவில் ஹீரா எண்ணெய் கிணறு உள்ளது. இங்கு இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ஓ.என்.ஜி.சி.) சார்பில் கச்சா எண்ணெய் எடுக்கும் பணி நடந்தது. இதற்காக அங்கு பி-305 என்ற எண்ணெய் துரப்பண கப்பல் நிலை நிறுத்தப்பட்டு அதில் 261 ஊழியர்கள் தங்கி இருந்தனர்.

இந்த நிலையில் கடல் கொந்தளிப்பு காரணமாக பி-305 எண்ணெய் துரப்பண கப்பலின் நங்கூரம் நிலை தடுமாறியது. இதன் காரணமாக அந்த கப்பல் கடலில் அடித்து செல்லப்பட்டது. பின்னர் கப்பலில் கடல் நீர் புக தொடங்கியது. இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் கடற்படையினர் கப்பலில் சிக்கியவர்களை மீட்க விரைந்தனர். மீட்பு பணிக்காக ஐ.என்.எஸ். கொச்சி போர்க்கப்பல் மற்றும் கடற்படைக்கு சொந்தமான மேலும் சில கப்பல்கள், ஹெலிகாப்டர்கள், ஓ.என்.ஜி.சி.க்கு சொந்தமான கப்பலும் எண்ணெய் துரப்பண கப்பலை நோக்கி விரைந்தன. எனினும் சூறைக்காற்று, பலத்த மழை, ராட்சத அலையால் அந்த கப்பலை நெருங்குவதில் மீட்பு படையினருக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது. 

இந்தநிலையில் கடும் போராட்டத்திற்கு பிறகு மீட்பு குழுவினர் அந்த கப்பல் பகுதியை அடைந்தனர். அப்போது எண்ணெய் துரப்பண கப்பல் மூழ்கி கொண்டு இருந்தது. இதனால் ஊழியர்கள் பலர் தங்களை காப்பாற்றிக்கொள்வதற்காக உயிர் காக்கும் கவச உடையுடன் கடலில் குதித்து தத்தளித்தது கொண்டு இருந்தனர். அவர்களை மீட்கும் பணி கடந்த 2 நாட்களாக துரித கதியில் நடந்தது. இதில் 186 பேரை உயிருடன் மீட்டனர். அவர்கள் கடற்படை கப்பல், ஹெலிகாப்டர்கள் மூலம் மும்பை கடற்படை தளத்துக்கு அழைத்து வரப்பட்டனர். 

ஆனால் நடுக்கடலில் கண்ணீரை வரவழைக்கும் சோகமாக 26 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது.  மேலும் நடுக்கடலில் 49 பேர் மாயமானார்கள். கப்பல் மூழ்கும் முன்பே அதில் இருந்த அனைவரும் உயிர்காக்கும் ஜாக்கெட்டுகள் அணிந்து உள்ளனர். எனவே மாயமானவர்கள் கடலில் மிதந்து கொண்டு இருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை கடற்படையினர் தேடி வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து