முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள மாநில எதிர்க்கட்சி தலைவராக சதீசன் நியமனம்

சனிக்கிழமை, 22 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

திருவனந்தபுரம் : கேரள மாநில எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வி.டி.சதீசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

கேரளத்தில் 140 இடங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து அந்த மாநில முதல்வராக பினராய் விஜயன் வியாழக்கிழமை மீண்டும் பதவியேற்றார். அவருடன் 20 போ் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்றது. 

இந்த நிலையில் கேரள மாநில எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸைச் சேர்ந்த வி.டி.சதீசனை டெல்லி மேலிடம் நியமனம் செய்துள்ளது. கடந்த பினராய் விஜயன் ஆட்சிக் காலத்தில் காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவராக ரமேஷ் சென்னிதலா செயல்பட்டார். எனவே, இந்தமுறையும் அவர் எதிர்க்கட்சித் தலைவர் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக வி.டி.சதீசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

சதீசன் எர்ணாகுளம் மாவட்டம், பறவூர் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ-ஆக தேர்வு செய்யப்பட்டவர்.  அத்துடன் இவர் கேரள ஐகோர்ட்டில் வழக்கறிஞராகவும் பணியாற்றி வருகிறார். எதிர்க்கட்சித் தலைவராக நியமனம் செய்யப்பட்ட வி.டி.சதீசனுக்கு ரமேஷ் சென்னிதலா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கேரள மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எப் கூட்டணி 41 இடங்களிலும் வெற்றிபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து