முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே.வங்கத்தில் பாபர் மசூதி கட்டப்படும்: திரிணாமுல் எம்.எல்.ஏ. பேச்சால் சர்ச்சை

புதன்கிழமை, 11 டிசம்பர் 2024      இந்தியா
Humayun-Kabir-2024-12-11

கொல்கத்தா, மேற்குவங்க மாநிலத்தில் பாபர் மசூதி கட்டப்படும் என திரிணாமுல் காங்கிரசின் எம்.எல்.ஏ.வான ஹுமாயூன் கபீர் அறிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி  உள்ளது.

அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கட்ட அங்கிருந்த ராமர் கோயில் இடிக்கப்பட்டதாக வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் இறுதி தீர்ப்பில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்ட சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்திருந்தது. 

கடந்த 2019, நவம்பர் 9-ம் தேதி இந்த தீர்ப்பில், அயோத்திக்கு அருகில் பாபர் மசூதி கட்டவும் நிலம் ஒதுக்கவும் உத்தரவானது. இதையடுத்து உ.பி. அரசு சார்பில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்கியும் அதன் பணிகள் இன்னும் துவக்கப்படவில்லை.

இந்நிலையில், பாபர் மசூதி மேற்குவங்க மாநில முர்ஷிதாபாத் மாவட்டத்தின் பெல்தங்காவில் கட்டப்பட வேண்டும் என குரல் எழுந்துள்ளது. இதை அம்மாநிலம் ஆளும் திரிணாமுல் காங்கிரசின் எம்.எல்.ஏ.வான ஹுமாயூன் கபீர் அறிவித்துள்ளார்.

இது குறித்து எம்.எல்.ஏ.வான கபீர் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகையில், 

மேற்கு வங்க மாநிலத்தில் முஸ்லிம்கள் 34 சதவிகிதம் உள்ளனர். இங்கு அவர்கள் தலைநிமிர்ந்து பெருமையுடன் வாழ வேண்டும். இது முஸ்லிம்களின் உரிமை. இதற்காக நான் ஒன்றை முன்மொழிய விரும்புகிறேன். பெல்தங்காவில்  2025, டிசம்பர் 6-க்குள்  2 ஏக்கர் நிலத்தில் பாபர் மசூதியின் பணிகள் துவங்கும்.

சுமார் 90 சதவிகித முஸ்லிம்கள் வாழும் பெல்காவில் மசூதிக்காக 100 பேர் கொண்ட ஒரு அறக்கட்டளை அமைக்க வேண்டும். மசூதிக்காக பணப்பற்றாக்குறை இருக்காது. இதை கட்டுவதற்காக நான் ரூ. ஒரு கோடி நன்கொடை அளிக்க உள்ளேன்  எனத் தெரிவித்தார்.

முர்ஷிதாபாத்தில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பரத்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக ஹுமாயூன் வகிக்கிறார். இவர் இங்கு முதன்முறையாக 2011 சட்டப்பேரவை தேர்தலில் தேர்வாகி தொடர்ந்து வென்று வருகிறார். தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது ஹுமாயூன், தொடர்ந்து பா.ஜ.க.வினர் தம் ஆக்ரோஷத்தை காட்டினால் அவர்களை இல்லாமல் செய்ய வேண்டி வரும். இரண்டு மணி நேரத்தில் அனைவரையும் வெட்டி அருகிலுள்ள பாகீரதி நதியில் வீச வேண்டி வரும் எனப் பேசி வழக்கில் சிக்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து