முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அமைச்சர் சுரேஷ் கோபியின் வீட்டில் திருட்டு: 2 பேரிடம் விசாரணை

புதன்கிழமை, 11 டிசம்பர் 2024      இந்தியா
Suresh-Gopi 2024-08-27

திருவனந்தபுரம், கேரளாவில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபியின் வீட்டில் இரும்பு பைப் உள்ளிட்ட சில பொருட்களை திருடிய 2 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

மத்திய  பெட்ரோலியம் மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபியின் பெற்றோர் தங்கியிருந்த வீடு கொல்லம் அருகே உள்ள இரவிபுரம் பகுதியில் உள்ளது. இந்த வீட்டில் யாரும் தங்குவது கிடையாது. இதனால் பெரும்பாலும் பூட்டப்பட்டிருக்கும். சுரேஷ் கோபி அல்லது அவரது உறவினர்கள் இங்கு சென்று தங்குவது வழக்கம். 

இந்நிலையில் நேற்று முன்தினம் சுரேஷ் கோபியின் தம்பி மற்றும் குடும்பத்தினர் இந்த வீட்டுக்கு சென்றனர். அப்போது 2 பேர் வீட்டின் சுவரை தாண்டி குதித்து வெளியே ஓடியது தெரியவந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் சென்று பார்த்தபோது வீட்டின் பின்புறத்தில் வைக்கப்பட்டிருந்த இரும்பு பைப் மற்றும் சில பொருட்களை காணவில்லை. 

இது குறித்து இரவிபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அங்கு வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பரிசோதித்ததில் இருவரும் அப்பகுதியை சேர்ந்த திருடர்கள் என தெரியவந்தது. அவர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து