முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உணவு, குடிநீரின்றி காசாவில் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தவிப்பு: ஐ.நா.

புதன்கிழமை, 11 டிசம்பர் 2024      உலகம்
UNO-2023 04 06

Source: provided

காசா: காசாவின் வடக்கு பகுதியினுள் வெளியிலிருந்து நுழையும் மனிதாபிமான உதவிகள் அனைத்தும் இஸ்ரேல் ராணுவத்தினால் தடுக்கப்பட்டிருப்பதால் ஆயிரக்கணக்கான காசா மக்கள் அத்தியாவசிய உதவிகளின்றி தவிப்பதாக ஐக்கிய நாடுகளின் சபை தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் 6 முதல் இஸ்ரேல் ராணுவம் வடக்கு காசாவில் தரைவழித் தாக்குதல் நடத்தி அப்பகுதிகளைக் கைப்பற்றிவருகிறது. இதனால் அப்பகுதிகளுக்குள் செல்லும் மனிதாபிமான உதவிகள் அனைத்தும் இஸ்ரேல் ராணுவத்தால் தடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த 66 நாட்களாக இஸ்ரேல் கைபற்றிய காசாவின் வடக்கு பகுதிகளான பெயிட் லஹியா, பெயிட் ஹனொன் மற்றும் ஜபாலியா ஆகிய இடங்களில் வாழும் 65,000 முதல் 75,000 பாலஸ்தீனர்கள் உணவு, நீர், மின்சாரம் மற்றும் மருத்துவம் ஆகிய அடிப்படை உதவிகளின்றி தவித்து வருவதாகவும், 5,500க்கும் மேற்பட்டோர் பெயிட் லஹியாவிலிருந்து வலுக்கட்டாயமாக இடமாற்றப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவரங்களின் கூட்டமைப்பான ஒசிஎச்ஏ தெரிவித்துள்ளது.

மேலும் அங்கு நிலவும் உணவுப் பற்றாக்குறையைப் பற்றி அந்த கூட்டமைப்பு கூறுகையில் மொத்தமாக காசாப்பகுதியில் ஐநாவைச் சார்ந்த வெறும் நான்கு உணவுக்கிடங்குகள் மட்டுமே தற்போது செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதுப்பற்றி, காசா நகரத்துக்கான ஐநாவின் மனிதாபிமான மற்றும் புனரமைப்பு ஒருங்கிணைப்பாளர் சிக்ரிட் காக் நேற்று (டிச.10) பத்திரிகையாளர்களிடம் ரகசியமாக கூறியதாவது:

காசாவில் பொதுமக்கள் உயிர்வாழும் சுழல் முற்றிலும் அழிவுகரமானதாக உள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது அங்கு நிலைமையை இன்னும் மோசமானதாக ஆக்கியுள்ளது. இதனால், ஐநா உள்பட பல உதவி நிறுவனங்கள் காசா மக்களுக்குத் தேவையான உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்க முடியாத சூழலில் உள்ளதாக, அவர் கூறினார்.

மேலும், தான் உள்பட பல்வேறு ஐநா அதிகாரிகளும் வடக்கு காசா பகுதிகளில் கான்வாய்கள் மற்றும் வணிகப்பொருட்களை அனுமதிக்கவும், தெற்கில் எகிப்து நாட்டிலிருந்து ரஃபா எல்லை மீண்டும் திறக்கவும் அதன் வழியாக இருமுறை பயன்படக்கூடிய பொருட்களை அனுமதிக்கவும் தொடர்ந்து பலமுறை இஸ்ரேலிடம் கேட்டுக்கொண்டிருப்பதாக சிக்ரிட் காக் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து