எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு நான் கேப்டனாக நியமிக்கப்படுவேன் என எதிர்பார்த்தேன் என்று யுவராஜ் சிங் தெரிவித்தார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்., 2007-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையில் இருந்து இந்தியா வெளியேறியதால் கடும் கொந்தளிப்புகள் இருந்தது. பின்னர் 2 மாத இங்கிலாந்து சுற்றுப்பயணமும், தென்ஆப்பிரிக்காவுக்கும், அயர்லாந்துக்கும் ஒரு மாத சுற்றுப்பயணமும் இருந்தது.அதன்பின்னர் 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடந்தது.
2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு நான் கேப்டனாக நியமிக்கப்படுவேன் என்று எதிர்பார்த்தேன். பின்னர் டோனி கேப்டனாக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டது. யார் கேப்டன் ஆனாலும், அது ராகுல் டிராவிட்டாக இருந்தாலும், கங்குலியாக இருந்தாலும் எதிர்காலத்தில் யாராக இருந்தாலும் நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும். நான் அதை செய்தேன் என்றார் யுவ்ராஜ் சிங்.
__________
சுருண்டது மே.இ.தீவுகள் அணி
தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது. தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர்கள் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் திணறினர்.
தொடக்க வீரர் பிராத்வைட், ஷாய் ஹோப் ஆகியோர் தலா 15 ரன்கள் எடுத்த நிலையில் அன்ரிச் நோர்ஜோ பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தனர். அடுத்து வந்த போனரை 10 ரன்னில் ரபடா வீழ்த்தினார். அதன்பின் வந்தவர்களை லுங்கி நிகிடி சாய்க்க 40.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த வெஸ்ட் இண்டீஸ் 97 ரன்னில் சுருண்டது. ஜேசன் ஹோல்டர் அதிகபட்சமாக 20 ரன்கள் சேர்த்தார். தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் லுங்கி நிகிடி 13.5 ஓவரில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். அன்ரிச் நோர்ஜோ11 ஓவரில் 35 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார்.
___________
வார்னர், ஸ்டாய்னிஸ் விலகல்
ஐ.பி.எல் போட்டிக்கு ஈடுகொடுக்கும் வகையில் 100 பந்துகள் கொண்ட தி ஹன்ட்ரட் கிரிக்கெட் போட்டியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிமுகம் செய்கிறது. ஆடவர், மகளிர் என இரு தரப்பினருக்கும் நடத்தப்படும் இந்தப் போட்டியில் தலா 8 அணிகள் கலந்துகொள்ளவுள்ளன. 2003-ல் டிவெண்டி20 கப் என்கிற டி20 போட்டியை இங்கிலாந்து அறிமுகப்படுத்தியது.
அதன் அடுத்தக்கட்டமாக 100 பந்துகள் கொண்ட இப்போட்டியைக் கடந்த வருடம் ஜூலை மாதம் அறிமுகம் செய்வதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக இப்போட்டி ஒத்திவைக்கப்பட்டது. இந்த வருட தி ஹன்ட்ரட் போட்டி, ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெறவுள்ளது. சதர்ன் பிரேவ் அணிக்குத் தேர்வான ஆஸி. வீரர்கள் டேவிட் வார்னர், ஸ்டாய்னிஸ் ஆகியோர் தி ஹன்ட்ரட் போட்டியிலிருந்து விலகியுள்ளார்கள்.
____________
சேத்தன் சக்காரியா உருக்கம்
ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய இளம் வேகப்பந்துவீச்சாளர் சேத்தன் சக்காரியா பலரது கவனத்தையும் பெற்றார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த சக்காரியா அண்மையில் கொரோனா பாதித்ததன் காரணமாக தன் தந்தையை இழந்தார். இப்போது இலங்கை செல்லும் இந்திய ஒரு கிரிக்கெட் அணிக்கு சக்காரியா தேர்வாகியிருக்கிறார்.
இது குறித்து சக்காரியா தெரிவிக்கையில்., "நான் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பது அப்பாவின் கனவு. இப்போது அப்பா இருந்திருந்தால் நிச்சயம் மகிழ்ந்திருப்பார். கடந்த ஒரு ஆண்டு காலமாக வாழ்க்கையில் பல்வேறு ஏற்ற இறக்கங்களை சந்தித்துவிட்டேன். இதுவரை எனக்கு சில மாதங்கள் மிகவும் உணர்ச்சிகரமாக இருந்துள்ளது" என்றார்.
___________
பாக். முன்னாள் வீரர் விருப்பம்
ஓய்வு பெற்ற பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் யாசிர் அராபத், டோனியின் தலைமைத்துவ பண்புகளை வானளாவ புழந்து பேசியுள்ளார். டோனி போன்ற ஒரு கேப்டன் இருந்திருந்தால் பாகிஸ்தான் அணி பெரிய அளவில் பயனடைந்திருக்கும் என்கிறார் யாசிர் அராபத். டோனி வீரர்களின் திறமையைத் துல்லியமாகக் கணித்து அவர்களிடமிருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வரும் ஒரு சிறந்த கேட்பன் கூறுகள் கொண்டவர் என்கிறார் யாசிர் அராபத்.
தற்போதைய பாகிஸ்தான் அணி திறமையானது, ஆனால் டோனி போன்ற கேப்டன் தான் இவர்களுக்கு ஊக்கமளிக்க முடியும் என்று நினைக்கிறார் யாசிர் அராபத்.“எம்.எஸ். டோனி இப்போது விளையாடவில்லை. அவர் மட்டும் ஓய்வு பெறாமல் இருந்திருந்தால் நான் அவரை பாகிஸ்தன் அணிக்கு கேப்டனாகத் தேர்வு செய்திருப்பேன் என்று யாசிர் அராபத் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
மத கஜ ராஜா விமர்சனம்
12 Jan 2025திருமணம் ஒன்றில் தனது சிறு வயது பள்ளி நண்பர்களை சந்தித்து பேசிக்கொண்டு இருக்கும் போது, அவர்கள் அனைவரும் ஒருவனால் பெரும் பிரச்சனையில் சிக்கியிருப்பது தெரிய வருகிறது.
-
வாசலில் வண்ணக் கோலமிட்டு தை மகளை நாம் வரவேற்போம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து
12 Jan 2025சென்னை : இன்பம் பொங்கும் தமிழ்நாடு என இல்லத்தின் வாசலில் வண்ணக் கோலமிட்டு, தை மகளை நாம் வரவேற்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பண்டிக்கைக்கு வாழ்த்து தெரிவித்த
-
இடைத்தேர்தலை புறக்கணிப்பது அ.தி.மு.க.வின் சரிவுக்கான புள்ளியாக அமையும்: திருமாவளவன்
12 Jan 2025சென்னை, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பது அ.தி.மு.க.வின் சரிவுக்கான புள்ளியாக அமையும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்
-
செக் குடியரசு ஓட்டலில் பயங்கர தீ: 6 பேர் பலி
12 Jan 2025பிராக் : வடக்கு செக் குடியரசில் உள்ள ஒரு ஓட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-01-2025
12 Jan 2025 -
சென்னை புத்தக கண்காட்சி நிறைவு
12 Jan 2025சென்னை : சென்னை நந்தனத்தில் நடைபெற்று வந்த புத்தகக் கண்காட்சி நேற்றுடன் நிறைவடைந்தது.
-
6.1 ரிக்டர் அளவில் மெக்சிகோவில் நிலநடுக்கம்
12 Jan 2025மெக்சிகோ சிட்டி, மெக்சிகோவில் ரிக்டர் 6.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அயலக தமிழர்களுக்கு பயிற்சி அளிக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
12 Jan 2025சென்னை : ‘வேர்களைத் தேடி' திட்டம் எனது அரசியல் வாழ்க்கையில் ஒரு மைல்கல் என்று தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், தமிழ் மொழி, கலைகள் குறித்து 2 ஆண்டுகளுக்கு அயலக தமிழர்களுக்கு
-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேட்டில் சிறப்பு சந்தை
12 Jan 2025சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தை அமைக்கப்பட்டு உள்ளது.;
-
அங்கோலாவில் காலரா தொற்றுக்கு 12 பேர் பலி
12 Jan 2025லுவாண்டா, அங்கோலாவில் காலரா தொற்றுக்கு 12 பேர் பலியாகி உள்ளனர் என அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.;
-
எம்.ஜி. ராயன் எழுதி இயக்கும் கள்ள நோட்டு
12 Jan 2025எம்.ஜி.ரா.
-
தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட அனிதா இந்திரா, கனடா பிரதமர் பதவிக்கு போட்டி
12 Jan 2025ஒட்டாவா : கனடா பிரதமர் பதவிக்கு தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட அனிதா இந்திரா போட்டியிடுகிறார்.
-
மாணவிகள் கழிவறையை சுத்தம் செய்த விவகாரம்: பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்
12 Jan 2025தர்மபுரி : மாணவிகள் கழிவறையை சுத்தம் செய்த விவகாரம் தொடர்பாக அரசு பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
-
வளி மண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு
12 Jan 2025சென்னை : வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மணிப்பூரில் ஆயுதங்கள், வெடிபொருள்கள் கண்டுபிடிப்பு
12 Jan 2025இம்பால் : மணிப்பூரில் இரண்டு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது ஆயுதங்கள், வெடிபொருள்களை பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர்.
-
உடல்நலக்குறைவால் நெல்லையப்பர் கோவில் யானை உயிரிழப்பு
12 Jan 2025நெல்லை, நெல்லையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி நேற்று உயிரிழந்தது.
-
வணங்கான் விமர்சனம்
12 Jan 2025இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள திரைப்படம வணங்கான். V House Productions சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இப்படத்துக்கு ஜி.வி.
-
லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் முன்னேற்றம்
12 Jan 2025லாஸ் ஏஞ்சல்ஸ் : லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
-
தமிழகம் பெண்களுக்கான பாதுகாப்பில் முன்னிலை : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
12 Jan 2025சென்னை : இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பில் தமிழ்நாடு முன்னிலையில் இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
புதிய தன்னம்பிக்கையை ஏற்படுத்தியவர்: விவேகானந்தர் பிறந்தநாளில் ஜனாதிபதி முர்மு புகழாரம்
12 Jan 2025புதுடெல்லி : சுவாமி விவேகானந்தரின் 162-வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது.
-
நலமும், வளமும் பெற்று வாழ வேண்டும்: மக்களுக்கு இ.பி.எஸ். பொங்கல் வாழ்த்து
12 Jan 2025சென்னை : மக்கள் அனைவரும் நலமும், வளமும் பெற்று வாழ வேண்டும்: எடப்பாடி பழனிசாமி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
S.முருகன் தயாரிக்கும் கொஞ்சநாள் பொறு தலைவா
12 Jan 2025ஆருத்ரன் பிக்சர்ஸ் சார்பில், S.முருகன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விக்னேஷ் பாண்டியன் இயக்கத்தில் கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள படம் “கொஞ்ச
-
இன்று வெளியாகிறது தருணம் படம்
12 Jan 2025அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’.
-
துபாய் கார் பந்தயத்தில் நடிகர் அஜித் அணி வெற்றி
12 Jan 2025துபாய் : துபாய் கார் பந்தயத்தில் நடிகர் அஜித் அணி வெற்றி பெற்றுள்ளது.
-
தமிழக மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுங்கள் : மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
12 Jan 2025சென்னை : இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறைஅமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்