முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண் ஊழியருக்கு கொரோனா எதிரொலி: 460 விமானங்களை ரத்து செய்தது சீனா

ஞாயிற்றுக்கிழமை, 20 ஜூன் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

பீஜிங் : உலக நாடுகளில் சீனாவில் தான் முதன்முதலில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வெளியுலகுக்கு தெரிய வந்தது. இந்த புதுவகை கொரோனாவால் உலகம் முழுவதும் பல கோடி பேர் பாதிப்படைந்து உள்ளனர். 

எனினும், சீனா பாதிப்புகளை பெருமளவு கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இந்நிலையில், தெற்கு சீனாவில் குவாங்டாங் மாகாணத்தில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என சுகாதார ஆணையம் தெரிவித்தது. 

அவர்களில் ஷென்ஜென் நகரில் 2 பேர், போஷன் மற்றும் டாங்குவான் நகரங்களில் தலா ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டது. மாகாண தலைநகர் குவாங்சவ் நகரில் மற்ற இருவருக்கு பாதிப்பு அறியப்பட்டு உள்ளது. 

இவர்களில் ஷென்ஜென் விமான நிலையத்தில் பணிபுரிந்து வரும் 21 வயது பெண் ஊழியர் ஒருவருக்கு டெல்டா வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 110 பேரை தனிமைப்படுத்தி கொள்ள அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். 

பெண் ஊழியருக்கு கொரோனா எதிரொலியாக 460 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. தொடர்ந்து விமான நிலையத்தில் கடைகள் மற்றும் உணவு விடுதிகள் மூடப்பட்டு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 

கொரோனா பரவலை கட்டுப்படுத்த கோடிக்கணக்கான பரிசோதனைகள் நடந்துள்ளன. டாங்குவான் நகரில் 13 பகுதிகள் மூடப்பட்டு உள்ளன. போக்குவரத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. 

சமீபத்தில் உறுதி செய்யப்பட்ட கொரோனா பாதிப்பு கொண்டவர்கள் அனைவரும் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டாலும், சமூக பரவல் ஏற்படும் ஆபத்து உள்ளது என குவாங்சவ் சுகாதார ஆணைய துணை இயக்குனர் சென் பின் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து