முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

48 மணி நேரமும் தேர்தல் ஆணையத்துக்கு சவால் நிறைந்த சோதனை காலம்-முரளிதரராவ்

திங்கட்கிழமை, 11 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப். - 11 - தி.மு.க.வினர் பணத்தை பட்டுவாடா செய்ய இருக்கும் 48 மணி நேரமும் தேர்தல் ஆணையத்துக்கு சவால் நிறைந்த சோதனை காலமாகும் என்று முரளிதர ராவ் கூறினார். பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய செயலாளர் முரளிதர் ராவ் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:​ தேர்தல் ஆணையத்தை கேள்வி கேட்டது மற்றும் விமர்சித்தது மூலம் தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தையே கேள்வி குறியாக்கி விட்டனர். தேர்தல் ஆணையம் என்பது தன்னிச்சையான அமைப்பு. அதன் மூலம் தான் நேர்மையான தேர்தலை நடத்த முடியும். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தேர்தல் ஆணையத்தை அதிகாரமற்ற அமைப்பாக மாற்றி விடுவார்கள். தேர்தல் ஆணையத்துக்கு விடப்பட்ட சவால்  சட்டம்​ ஒழுங்கும், ஜனநாயகத்துக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இதை பாரதிய ஜனதா ஏற்காது. 

தமிழ்நாட்டில் அடுத்த 48 மணி நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முக்கிய தலைவர்கள் மூலம் போய் சேர்ந்து விட்டது. இந்த 48 மணி நேரமும் தேர்தல் ஆணையத்துக்கு சவால் நிறைந்த சோதனை காலம். இதை தடுக்க தேர்தல் கமிஷன் விழிப்புடன் செயல்பட வேண்டும். முதலமைச்சர் கருணாநிதி, மத்திய மந்திரி மு.க. அழகிரி ஆகியோர் தேர்தல் ஆணையத்தை, விமர்சித்து உள்ளனர். இதை காங்கிரஸ் கண்டு கொள்ள வில்லை. இதன் மூலம் அவர்களது செயலுக்கு காங்கிரஸ் உறுதுணையாக இருக்கிறது.

தமிழக மக்களின் பிரச்சினைகளுக்காக மாநில அளவிலும், தேசிய அளவிலும் குரல் கொடுக்கும் பாரதிய ஜனதாவை தமிழக மக்கள் ஆதரிக்க வேண்டும். 

இவ்வாறு முரளிதர ராவ் கூறினார். 

முன்னதாக மைலாப்பூர் தொகுதி  பாரதிய ஜனதா வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசனை ஆதரித்து இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற சைக்கிள் பேரணியை முரளிதரராவ் துவக்கி வைத்தார். இதில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று வீதி, வீதியாக சைக்கிளில் சென்று வாக்கு சேகரித்தனர்.

பின்னர் நேற்று மாலையில் வேளச்சேரி தொகுதி வேட்பாளர் தமிழிசை சவுந்தர்ராஜனுக்கும், விருகம்பாக்கம் தொகுதி வேட்பாளர் டால்பின் ஸ்ரீதருக்கும் ஆதரவு திரட்டி பாரதிய ஜனதா மூத்த தலைவரும், பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சுஷ்மா சுவராஜ் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்