முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தடைகள் உடைத்து தமிழினம் முன்னேற அண்ணாவின் பிறந்த நாளில் சூளுரைப்போம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் டுவிட்

புதன்கிழமை, 15 செப்டம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : அண்ணாவின் 113-வது பிறந்தநாளில் தடைகள் உடைத்து, தமிழினம் முன்னேறச் சூளுரைப்போம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிலையில், அண்ணாவின் பிறந்தநாள் தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், 

அன்பால் தமிழகத்தை  ஆண்ட பெரியாரின் கொள்கைக் கைத்தடி; ஆயிரமாண்டு ஆரியமாயை பொசுக்கிய அறிவுத்தீ, இந்தி திணிப்புக்கெதிராய் பாய்ந்த தமிழ் ஈட்டி, டெல்லிக்கு  திகைப்பூட்டிய திராவிடப் பேரொளி பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்தநாளில் தடைகள் உடைத்து, தமிழினம் முன்னேறச் சூளுரைப்போம் என தெரிவித்துள்ளார். முன்னதாக, அண்ணாசாலை, வள்ளுவர்கோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அண்ணா சிலைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 6 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 hours ago
View all comments

வாசகர் கருத்து