முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இப்படியும் நடந்த கொடுமை: ஈயம் பித்தளைக்கு கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் வழங்கப்பட்டது அம்பலம்: கோடிக்கணக்கில் நடந்த மோசடி ஆய்வில் வெளியானது

வியாழக்கிழமை, 23 செப்டம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான ஆய்வு நடந்து வரும் நிலையில், ஈயம் - பித்தளையில் செய்யப்பட்ட கவரிங் நகைகளை அடகு வைத்தும், ஒரே நபர்கள் நூற்றுக்கணக்கில் நகைக்கடன் பெற்று மோசடி செய்திருப்பது அம்பலமாகியுள்ளது. 

கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் 5 சவரன் வரையிலான நகைகளை அடமானம் வைத்து பெறப்பட்ட நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தகுதியான பயனாளிகளை கண்டறிய மாநிலம் முழுவதும் கூட்டுறவு வங்கியில் நகைக் கடன் பெற்றவர்களின் விபரங்களை ஆய்வு செய்ய உத்தரவிட்டார்.

அதன்படி நடத்தப்பட்ட ஆய்வில் நகைக்கடன் பெறுவதில் பலவிதமான மோசடிகள் நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் கூட்டுறவு சங்கத்தில் நகைகளை அடகு வைக்காமலேயே வைத்தது போல் கணக்கு காட்டி சுமார் 2 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளது. நாமக்கல் மல்லசமுத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் அதன் நிர்வாகக் குழு இயக்குநரான கிருஷ்ணசாமி என்பவர் மட்டும் 10 பொட்டலங்களில் ஈயம், பித்தளையில் செய்த கவரிங் நகைகளை வைத்து 11 லட்ச ரூபாய்க்கு மேல் கடன் பெற்றது தெரியவந்துள்ளது.

குமரி மாவட்டம் 

எப்படியும் நகைக்கடனை தள்ளுபடி செய்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில், அதிகாரிகள் துணையுடன் குமரி மாவட்டம் கீழ்குளத்தில் ஒரே நபர் 5 சவரனுக்கு உட்பட்டு 625 நகைக்கடன்கள் மூலம் ஒன்றேகால் கோடி ரூபாயை நகைக்கடனாக பெற்றிருந்ததும், அதே சங்கத்தில் மற்றொரு நபர் 647 நகைக் கடன்கள் மூலம் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் கடன் பெற்றதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

சேலம் மற்றும் தருமபுரி

சேலம் காடையம்பட்டி மற்றும் தருமபுரி பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் ஒரே நபர் 2.42 கிலோ நகைகளை அடகு வைத்து 72லட்சம் ரூபாய்க்கு 384 நகைக்கடன்கள் பெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு கூட்டுறவு வங்கிகளில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நபர்கள் 614 நகைக்கடன்கள் மூலம் 1கோடியே 63லட்சம் ரூபாய் கடனும், மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 641 நகைக் கடன்கள் மூலம் 2கோடி ரூபாய் அளவுக்கும் கடன் பெற்றிருக்கின்றனர். ஒரே ஆதார் எண்ணை பயன்படுத்தியும் 600-க்கும் மேற்பட்ட நகைக் கடன்கள் மூலம் சுமார் இரண்டரை கோடி ரூபாய் அளவுக்கு கடன் திருவண்ணாமலையில் பெறப்பட்டுள்ளது. 

சிவகங்கை மாவட்டம்

சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் ஒரே நபருக்கு 300-க்கும் மேற்பட்ட நகை கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

உசிலம்பட்டி

வறுமை கோட்டிற்கு கீழுள்ள ஏழைகளுக்கான அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளை பயன்படுத்தி மதுரை மாவட்டம் பாப்பையாபுரம், சுந்தரலிங்கபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் 70லட்சம் ரூபாய்க்கு 300 நகைக்கடன்கள் வழங்கியதும், சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் குன்றக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் 2 கிலோவிற்கும் அதிகமான நகைகளை அடகு வைத்து 82லட்சம் ரூபாய் கடன் பெற்று மோசடி செய்துள்ளனர்.

நாகப்பட்டினம்

நாகையைச் சேர்ந்தவரின் குடும்ப அட்டையை வைத்து மதுரை உசிலம்பட்டி கூட்டுறவு சங்கத்தில் ஒரு கிலோ நகைகளை அடமானம் வைத்து கடன் பெறப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் நகை அடகுகடைக்காரர் ஒருவர் கூட்டுறவு வங்கியில் 25 நகைக்கடன் பெற்றதும், மேலும் பல இடங்களில் குறைந்த வட்டியில் நகைக்கடன் வாங்கி வெளியில் அதிக வட்டிக்கு கடன் கொடுத்ததும் தெரியவந்துள்ளது.

இப்படி வழங்கப்பட்ட பெரும்பாலான நகைக்கடன்கள் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி சலுகையை முறைகேடாக பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் பெறப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. தங்க முலாம் பூசப்பட்ட ஈயம் பித்தளை நகைகளுக்கு எல்லாம் நகை கடன் வழங்கிய கூட்டுறவு வங்கி அதிகாரிகள், நல்ல வேளையாக பழைய இரும்புக்கு நகை கடன் வழங்கவில்லை என்பது தான் ஆறுதலான விஷயம்.

 

இந்த மோசடிகள் எல்லாம் மக்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து