முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இதுவரை 88.34 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது: மத்திய சுகாதாரத்துறை தகவல்

வியாழக்கிழமை, 30 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

இந்தியாவில் இதுவரை 88.34 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை நேற்று அளித்துள்ள தரவுகளின்படி, நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 65,34,306 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  88,34,70,578 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள் வருமாறு., 18 - 44 வயது முதல் தவணை -  35,78,56,886. இரண்டாம் தவணை -  8,10,29,611. 45 - 59 வயது - முதல் தவணை -  15,88,81,646, இரண்டாம் தவணை -  7,62,14,993. 60 வயதுக்கு மேல - முதல் தவணை -  10,10,10,623, இரண்டாம் தவணை -  5,58,98,335.

சுகாதாரத்துறை மூலம் முதல் தவணை -  1,03,72,470, இரண்டாம் தவணை -  88,82,131.  முன்களப் பணியாளர்கள் மூலம் முதல் தவணை -  1,83,52,116, இரண்டாம் தவணை -  1,49,71,767 என  மொத்தம் 88,34,70,578 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மாநிலங்களின் கையிருப்பில் 5 கோடி தடுப்பூசிகள் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்தியில்,

 

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு சார்பில் இதுவரை  86,51,52,695  தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.  மேலும்,  5,00,46,000  தடுப்பூசிகளை கையிருப்பில் வைத்துள்ளனர். கூடுதலாக 63,69,890 தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தரப்பிலிருந்து அனுப்பப்பட்டுள்ளன. என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 6 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 hours ago
View all comments

வாசகர் கருத்து