முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்க்டிக் பனிப் பாறைகள் உருகுவதால் புதிய வைரஸ்கள் - பாக்டீரியாக்கள் பரவும் அபாயம் - ஆய்வில் தகவல்

செவ்வாய்க்கிழமை, 5 அக்டோபர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : புவி வேகமாக வேகமாக வெப்பமடைந்து ஆர்க்டிக்ப் பனிப்படலம் உருகுவகுதால், அணுக்கழிவுகள், கண்டுபிடிக்கப்படாத வைரஸ்கள், ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு மதிக்காத பாக்டீரியாக்கள் பரவலாம் என ஓர் அறிக்கை கண்டறிந்துள்ளது.

பனி உருகுவதால், பனிப்போர் காலத்து அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள், அணு உலைகள், சுரங்கங்களிலிருந்து ஏற்படுட்ட சேதங்கள் போன்றவை வெளிப்படலாம் என அவ்வறிக்கை கூறுகிறது. ஆர்க்டிக் பகுதியில் பனியில் உறைந்திருக்கும் 90 லட்சம் சதுர மைல் பரப்பளவு சுமார் 10 லட்சம் ஆண்டுகள் பழமையானவை என்பது குறிப்பிடத்தக்கது.

பெர்மா ஃப்ரோஸ்ட் எனப்படும் நிரந்தர பனிப்படலங்கள் நிலைகுலைந்து உருகி வருவது பசுமை இல்ல வாயுக்களை வளிமண்டலத்தில் வெளியிடுவதற்கான ஒரு முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. இதன் தாக்கங்கள் மிகப் பரவலாக இருக்கும் என்றும், அணுக்கழிவுகள், கதிர்வீச்சு, அறியப்படாத வைரஸ்கள் மற்றும் கவலைக்குரிய பிற வேதிப் பொருள்கள் வெளியாவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பது குறைவாகவே புரிந்துகொள்ளப்பட்டிருப்பதாக இந்த ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து