முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடி முன்னிலையில் இந்தியா-டென்மார்க் இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்து

சனிக்கிழமை, 9 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : பிரதமர் மோடி முன்னிலையில் பல்வேறு துறைகளில் இந்தியா-டென்மார்க் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

டென்மார்க் பிரதமர் மெட்டா பிரெடெரிக்சன் 3 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்தியாவுக்கு வருகை தந்த டென்மார்க் பிரதமர் மெட்டா பிரெடெரிக்சனை, பிரதமர் மோடி வரவேற்றார். 

இந்நிலையில், இந்தியா டென்மார்க் இடையே நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்தாகி உள்ளன.நிலத்தடி நீராதாரம் மற்றும் திறன் மேம்பாடு உள்ளிட்ட தலைப்புகளின் கீழ்  இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் - ஐதராபாத்தில் உள்ள தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம், ஆர்ஹஸ் பல்கலைக்கழகம் டென்மார்க்,  டென்மார்க் மற்றும் கிரீன்லாந்தின் புவியியல் ஆய்வு மையம் ஆகிய அமைப்புகள் இணைந்து நிலத்தடி நீர் ஆதாரங்கள் மற்றும் நீர்நிலைகளின் வரைபடம் ஆக்குதல்  தொடர்பாக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

பாரம்பரிய அறிவு குறித்து அறிய டிஜிட்டல் நூலக வசதி ஏற்படுத்துதல் தொடர்பாக டேனிஷ் காப்புரிமை மற்றும் வர்த்தக முத்திரை அலுவலகம் - அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில்  இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. வெப்பமண்டல காலநிலைக்கு ஏற்றவாறு இயற்கை குளிரூட்டிகள் அமைப்பது தொடர்பாக ஐ.ஐ.டி பெங்களூரு - டான்போஸ் ஆலை இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் மற்றும் டென்மார்க் அரசாங்கம் இடையேயான கூட்டு நடவடிக்கைக்கான ஒப்பந்தம் உள்ளிட்ட நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து