முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு

வெள்ளிக்கிழமை, 22 அக்டோபர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 103.92 ரூபாய், டீசல் லிட்டர் 99.92 ரூபாய்க்கும் விற்பனையானது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.  நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன. தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பால் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைக்கப்பட்டது. 

சென்னையில் நேற்று முன்தினம் பெட்ரோல் லிட்டர் 103.61 ரூபாய், டீசல் லிட்டர் 99.59 ரூபாய்க்கும் விற்பனையானது.  இந்நிலையில், சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்து 103.92 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்து 99.92 ரூபாய்க்கும் விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து