முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு மட்டும் இரவு ஊரடங்கு: லெபனான் அரசு

வியாழக்கிழமை, 2 டிசம்பர் 2021      உலகம்
Image Unavailable

லெபனான் நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு மட்டும் இரவு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

உருமாறிய புதிய கொரோனா வைரஸ், தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24-ம் தேதி கண்டறியப்பட்டிருப்பது உலகை உலுக்கி உள்ளது. இதற்கு காரணம், இதுவரை கண்டறியப்பட்டுள்ள உருமாறிய வைரஸ்களான ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா வைரஸ்களை விட இந்த புதிய உருமாறிய வைரஸ், அதிபயங்கரமானது, 50 பிறழ்வுகளை கொண்டுள்ளது என மருத்துவ விஞ்ஞானிகள் கருதுவதுதான். 

இதனால் பல நாடுகள் பயண கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இந்த வைரஸ் தென் ஆப்பிரிக்கா மட்டுமல்லாமல் சிங்கப்பூர், இஸ்ரேல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. இதனிடையே ஒமிக்ரான் வைரஸ் பற்றி முழுமையாக தெரியவர சில வாரங்கள் பிடிக்கும் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. 

இந்நிலையில் லெபனான் நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு மட்டும் இரவு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் பிராஸ் அபியாட் பிறப்பித்துள்ளார்.  இதன்படி வரும் 17-ம் தேதி முதல் ஜனவரி 9-ம் தேதி வரை, இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை வெளியே வர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்துக் கொண்டவர்கள் இந்த கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கப்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து