முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செக்காணூரனியில் டெங்கு காய்ச்சல் அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கை

புதன்கிழமை, 7 நவம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

திருமங்கலம், நவ. - 7 - திருமங்கலம் அருகே உள்ள செக்காணூரனியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதார துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். செக்காணூரனி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக பல்வேறு சுகாதார குழுக்கள் அமைக்கப்பட்டு துப்புரவு பணியாளர்கள் உதவியுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் ஏ.டி.எஸ். கொசு ஒழிப்பு மருந்து, கிருமி நாசினிகள் தெளிக்கப்படுகிறது. மதுரை மாவட்ட பூச்சியியல் சிறப்பு நிபுணர் டாக்டர் அர்ஜூன், டாக்டர் கார்த்திக் சுந்தர், சுகாதார ஆய்வாளர் போஸ் மற்றும் மாவட்ட கவுன்சிலர் அய்யப்பன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். பின்னர் வீடு வீடாக சென்று யாருக்கேனும் டெங்கு காய்ச்சல் பரவி உள்ளதா என்று கேட்டறிந்தனர். சுகாதார ஆய்வாளர்கள் ஜெய்சங்கர், முருகேசன், செவிலியர்கள் சியாமளா, ஒய்யம்மாள், வசந்தி, முத்துலெட்சுமி, எலிசபத்ராணி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்