முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற தாமதம்: உள்துறை செயலருக்கு ரூ. 10,000 அபராதம் விதித்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு

வெள்ளிக்கிழமை, 22 செப்டம்பர் 2023      தமிழகம்
Mdu-High-Court 2023-04-06

Source: provided

மதுரை : பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சிறப்பு நீதிமன்றம் அறிவித்த ரூ. ஒரு லட்சம் நிதி உதவியை வழங்குவதில் கால தாமதம் செய்த உள்துறை செயலருக்கு ரூ. 10,000 அபராதம் விதித்து ஐகோர்ட்  மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பெண் தாக்கல் செய்த மனுவில், நாங்கள் பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்தவர்கள், நான் எனது கணவர் மற்றும் 3 குழந்தையுடன் வசித்து வருகிறேன். டிசம்பர், 2020-ல் எனது 7 வயது மகளை, எங்கள் பகுதியில் வசிக்கக்கூடிய வேலுச்சாமி என்பவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். இது தொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து, போக்சோ சிறப்பு வழக்கில் அவரைக் கைது செய்தனர். 

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனையையும், பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. ஒரு லட்சம் நிதி உதவியும் வழங்க உத்தரவிட்டு தீர்ப்பளித்தது. சிறுமிக்கு இந்த ரூ. ஒரு லட்சம் நிதி உதவியை ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என சிறப்பு நீதிமன்றம் மார்ச் 2022-ல் உத்தரவு பிறபித்தது. அதன் பிறகு, நிதி உதவி தொடர்பாக நாங்கள் உள்துறை செயலருக்கு மனு அனுப்பினோம், மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பினோம். ஆனால், எந்த பதிலும் இல்லை. எனவே, வறுமையில் வாடும் எங்கள் குடும்பத்திற்கு, நீதிமன்ற உத்தரவுப்படி ரூ. ஒரு லட்சத்தை வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கேட்டிருந்தார். 

இந்த வழக்கு ஐகோர்ட் கிளை நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. ஒரு  லட்சம் நிதி உதவி வழங்க சிறப்பு நீதிமன்றம் அறிவித்தும் இன்னும் வழங்கப்படவில்லை என்று வாதிட்டார்.  இதைக் கேட்ட நீதிபதி புகழேந்தி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 6 சதவீத வட்டியுடன் உடனடியாக அந்த ரூ ஒரு  லட்சம் நிதி உதவியை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், நிதி உதவியை வழங்குவதில் கால தாமதம் செய்த உள்துறை செயலருக்கு ரூ. 10,000 அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த  10 ஆயிரம் ரூபாய் அபராதத் தொகையையும் சேர்த்து சிறுமிக்கே வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து