முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரியில் கர்ப்பிணிகளுக்கு விரைவில் ஊட்டச்சத்து பெட்டகம் துணை நிலை ஆளுநர் தமிழிசை தகவல்

வியாழக்கிழமை, 28 செப்டம்பர் 2023      இந்தியா
Tamilisai

Source: provided

புதுச்சேரி:கர்ப்பிணிகளுக்கு விரைவில் ஊட்டச்சத்து பெட்டகம்  கொடுக்கப்படும் என்று துணை நிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். 

புதுச்சேரி ஜவகர் நகரில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் கீழ் நடந்த சத்துணவு மாத விழாவில் துணை நிலை ஆளுநர் தமிழிசை நேற்று கலந்து கொண்டு பேசியதாவது: 

மருத்துவர் என்ற முறையில் அனைவருக்கும் ஊட்டச்சத்து தேவை என்று சொல்வேன். உலக சுகாதார நிறுவனம் கூறுவது, இந்திய பெண்களில் 70 சதவீதம் பேர் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. விலை உயர்ந்ததுதான் சத்து என்று நினைக்காதீர்கள். கீரை, காய்கறிகளில் அதிக சத்து உள்ளது. ஆயிரம் ரூபாய் சத்து மாவை விட முருங்கை கீரையில் அதிக சத்து உள்ளது. காய்கறிகளில் ஊட்டச்சத்து உள்ளது. 

தமிழகம், புதுச்சேரி உணவு பழக்கத்துக்கு இணையாக வேறு உணவு பழக்கம் இல்லை. உலகிலேயே சாப்பிட்டு விட்டு செரிமானத்திற்காக ரசம் சாப்பிடுவது இங்கு மட்டும்தான், உலகில் எங்கும் கிடையாது. முன்னோர் நன்கு சிந்தித்துள்ளனர். 

கொரோனா வந்தவுடன் சாப்பிட சொன்ன விஷயங்கள் அனைத்தும் ரசத்தில் உள்ளது. இது தமிழகம், புதுச்சேரி தாண்டி எங்கும் இல்லை. நம் உணவை ஆர்டரா சாப்பிடாமல் ஆர்டர் போட்டு சாப்பிடுறோம். நம் உணவு பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். 

கர்ப்பிணிகளுக்கு ஊட்டச் சத்து பெட்டகம் தர முதல்வரிடம் கூறியுள்ளேன். கண்டிப்பாக கொடுக்கப்படும்.  பெண்கள் நன்றாக இருந்தால்தான் குடும்பத்தை காக்க முடியும்.  வீட்டையும், நாட்டையும் பார்க்க வேண்டும் என்பதால் ஊட்டச்சத்து உணவு சாப்பிடுங்கள் என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து