முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி: புதிய உச்சம் தொட்ட இந்திய பங்குச்சந்தை

திங்கட்கிழமை, 4 டிசம்பர் 2023      இந்தியா
stock-market 2023 06 28

Source: provided

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் நேற்று புதிய உச்சம் தொட்டன.

இந்திய பங்குச்சந்தைகள் கடந்த மாதம் செப்டம்பர் முதல் அக்டோபர் இறுதி வரை இறங்குமுகமாக இருந்தது. அதன்பின்னர், நவம்பர் தொடக்கம் முதல் பங்குச்சந்தை மீண்டும் ஏறுமுகம் கண்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக இந்திய பங்குச்சந்தைகள் ஏறுமுகத்திலேயே உள்ளன. அந்நிய முதலீட்டாளர்கள் அதிக அளவில் இந்திய பங்குச்சந்தைகளில் முதலீடு செய்தல், சர்வதேச பங்குச்சந்தைகளின் சாதக நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பங்குச்சந்தைகள் ஏறுமுகத்தில் உள்ளன.

இந்நிலையில், இந்திய பங்குச்சந்தைகள் நேற்று புதிய உச்சம் தொட்டுள்ளன. 4 மாநில தேர்தலில் பாஜக 3 மாநிலங்களில் வெற்றிபெற்றுள்ள நிலையில் இந்திய பங்குச்சந்தை நேற்று காலை தொடங்கியதும் புதிய உச்சம் பெற்றது. அதன்படி, நிப்டி சுமார் 300 புள்ளிகள் அதிகரித்து 20 ஆயிரத்து 602 என்ற புதிய உச்சம் தொட்டுள்ளது. பேங் நிப்டி சுமார் 1 ஆயிரம் புள்ளிகள் அதிகரித்து 45 ஆயிரத்து 821 புள்ளிகளை தொட்டுள்ளது. சென்செக்ஸ் 1 ஆயிரம் புள்ளிகள் அதிகரித்து 68 ஆயிரத்து 587 புள்ளிகள் என்ற புதிய உச்சம் தொட்டுள்ளது. பின் நிப்டி சுமார் 430 புள்ளிகள் அதிகரித்து 20 ஆயிரத்து 655 புள்ளிகளை தொட்டுள்ளது. இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சம் தொட்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து