முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காசாவில் இஸ்ரேல் படை தாக்குதல்: இதுவரை 15,523 பாலஸ்தீனர்கள் பலி

திங்கட்கிழமை, 4 டிசம்பர் 2023      உலகம்
Israeli-army-2023-11-30

Source: provided

டெல் அவிவ் : காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனர்களின் பலி எண்ணிக்கை 15,523 ஆக உயர்ந்துள்ளதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர் சந்திப்பின்போது அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அஷ்ரப் கூறியதாவது, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனப் பகுதியில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 41,000-ஐ தாண்டியுள்ளது. காயமடைந்த நூற்றுக்கணக்கான மக்கள் மிகக் குறைந்த மருத்துவ வசதிகளுடன் தரையில் சிகிச்சை பெற்று வருவதாக அல்-கித்ரா தெரிவித்தார்.

கடந்த அக்.7-ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தி, சுமார் 240 பேரை பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.  இதைத் தொடர்ந்து, காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. காசா மீது இஸ்ரேல் கடுமையாகத் தாக்குதல் மேற்கொண்டு வந்த நிலையில், ஹமாஸிடம் உள்ள பிணைக் கைதிகளையும் இஸ்ரேலிடம் உள்ள பாலஸ்தீன கைதிகளையும் விடுவிக்க வசதியாக, ஒருவார காலம் தற்காலிக போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்தப் போர் நிறுத்தத்தின்போது ஹமாஸிடம் இருந்த 105 பிணைக் கைதிகள், இஸ்ரேல் சிறைகளில் இருந்த 240 பாலஸ்தீன கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். கடந்த வெள்ளிக்கிழமை போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த நிலையில், காசாவை இஸ்ரேல் மீண்டும் கடுமையாகத் தாக்கி வருகிறது. வடக்கு காசாவில் தாக்குதலில் ஈடுபட்டு வந்த இஸ்ரேல், தற்போது தெற்கு காசாவையும் தாக்கத் தொடங்கியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து