முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி

புதன்கிழமை, 1 மே 2024      இந்தியா
Rupali-Ganguly 2024-05-01

Source: provided

புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் கடந்த 19-ம் தேதியும், 2-ம் கட்ட தேர்தல் கடந்த 26-ம் தேதியும் நடைபெற்றது. இதையடுத்து, வரும் 7, 13, 20,25 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. 

ஜூன் 1-ம் தேதி கடைசி கட்டமான 7-ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.  தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் அரசியல் பிரபலங்கள் மாற்று கட்சிகளில் இணையும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. அதே போல், சினிமா பிரபலங்களும் அரசியல் கட்சிகளில் இணையும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகிறது. 

இந்நிலையில், பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார். அனுபமா என்ற இந்தி சீரியல் மூலம் பிரபலமான வருபவர் ரூபா கங்குலி.  இவர் பா.ஜ.க.வில் இணைந்துள்ளார். 

டெல்லியில் பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் வினோத் தவ்டே முன்னிலையில் ரூபாலி கங்குலி அக்கட்சியில் இணைந்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ரூபா கங்குலி, பிரதமர் மோடியின் பாதையை பின்பற்றி நாட்டு மக்களுக்கு சேவை செய்ய நான் பா.ஜ.க.வில் இணைந்துள்ளேன். அமித்ஷாவின் தலைமையில் சிறப்பாக  செயல்பட்டு விரும்புகிறேன் என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து