முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேப்டன் பாண்ட்யாவுக்கு மட்டுமல்ல மும்பை அணிக்கே அபராதம்

புதன்கிழமை, 1 மே 2024      விளையாட்டு
Hardick-pandya

Source: provided

லக்னோ:பாண்ட்யாவுக்கு மட்டுமல்ல மொத்த மும்பை அணிக்கே ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.

விறுவிறுப்பாக... 

17-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை - லக்னோ அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 144 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக நேஹல் வதேரா 46 ரன், டிம் டேவிட் 35 ரன் எடுத்தனர். லக்னோ தரப்பில் மோஷின் கான் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 145 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய லக்னோ அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 145 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நிர்ணயிக்கப்பட்ட... 

இந்நிலையில் இந்த போட்டியில் மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் 20 ஓவர்களை வீசி முடிக்கவில்லை. எனவே குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கத் தவறிய விதிமுறையை மீறிய மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு இந்த போட்டிக்கான சம்பளத்திலிருந்து ரூ. 24 லட்சம் அபராதமாக விதிக்கப்படுவதாக ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது.

தலா ரூ.6 லட்சம்...

ஏற்கனவே பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியிலும் மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை. அதனால் ஏற்கனவே பாண்ட்யாவுக்கு மட்டும் ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. தற்போது 2-வது முறையாக அந்தத் தவறை செய்துள்ளதால் பாண்ட்யாவுக்கு ரூ. 24 லட்சம் அபராதமும் இம்பேக்ட் வீரர் உள்ளிட்ட எஞ்சிய 11 மும்பை வீரர்களுக்கு தலா ரூ. 6 லட்சம் அபராதமும் விதிக்கப்படுவதாக ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து