முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி. தேர்தல் முடிவுகள் குறித்து திண்டுக்கல், திருவள்ளூர் அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் இ.பி.எஸ். ஆலோசனை

திங்கட்கிழமை, 29 ஜூலை 2024      அரசியல்
EPS 2023-10-17

சென்னை, பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து திண்டுக்கல், திருவள்ளூர் அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் நேற்று இ.பி.எஸ். ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து மக்களவைத் தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளிடம் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 2-ம் கட்ட ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்று திண்டுக்கல் மற்றும் திருவள்ளூர் ஆகிய மக்களவைத் தொகுதிகளைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

திண்டுக்கல் மக்களவைத் தொகுதி அ.தி.மு.க. நிர்வாகிகள் பேசும்போது, “நாங்கள் தேர்தலில் கடுமையாகத்தான் உழைத்தும்அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் தோல்வியைச் சந்தித்தனர். என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. பின்னர் பேசிய பழனிசாமி, “மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை அ.தி.மு.க. அரசு தான் செயல்படுத்தியது. அ.தி.மு.க. அரசின் சாதனைகளை நிர்வாகிகள் மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கத் தவறிவிட்டனர்.

அதனால்தான் நாம் இந்தத் தேர்தலில் தோல்வியை சந்தித்து இருக்கிறோம். எனவே, நிர்வாகிகள் அனைவரும் மாதந்தோறும் ஆலோசனை கூட்டத்தை நடத்த வேண்டும். அ.தி.மு.க. அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும். இளைஞர்களை அதிக அளவில் கட்சியில் சேர்க்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலை மனதில் வைத்து பணியாற்ற வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றால் தான் 2026 சட்டப்பேரவை தேர்தலில் நாம் ஆட்சியை பிடிக்க முடியும்.” என்று அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து