முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குட்கா வழக்கு: செப். 9-ல் போலீஸ் அதிகாரிகள் நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 2 ஆகஸ்ட் 2024      இந்தியா
Chennai-high-court2

சென்னை, குட்கா விற்பனை தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர்கள், போலீஸ் அதிகாரிகள் செப்டம்பர் 9-ம் தேதி நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் தடையை மீறி  குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இதில் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி செந்தில் முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேருக்கு எதிராக சென்னை சி.பி.ஐ. கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கின் கூடுதல் குற்றப் பத்திரிகையை சி.பி.ஐ. அதிகாரிகள் தாக்கல் செய்தனர். அதில், மத்திய, மாநில அதிகாரிகள் ஆர். சேஷாத்ரி, குல்சார் பேகம், அனீஷ் உபாத்யாய், வி. இராமநாதன், ஜோஸ் தாமஸ், பி.செந்தில்வேலவன் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா என்ற பி.வெங்கடரமணா, வி.எஸ்.கிருஞ்சிச்செல்வன், எஸ்.கணேசன், முன்னாள் அமைச்சர் டாக்டர். சி, விஜயபாஸ்கர், அ.சரவணன், டாக்டர். லக்ஷ்மி நாராயணன், பி.முருகன் முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், வி.கார்த்திகேயன், ஆர்.மன்னர்மன்னன், வி.சம்பத், ஏ.மனோகர், அ.பழனி கே.ஆர்.ராஜேந்திரன் ஆகிய 21 பேர் மீது கூடுதல் குற்றபத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கில் முன்னாள் மற்றும் இன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளதால் சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றி சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவிட்டது. 

இந்த வழக்கு சி.சஞ்சய் பாபா முன்பு நேற்று  விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட மாதவராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத் துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 5 பேர் ஆஜராகி இருந்தனர்.

இதனையடுத்து நீதிபதி வழக்கில் கூடுதல் குற்றப் பத்திரிகை தற்பொழுது தாக்கல் செய்யப்பட்டு புதிதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதால் அனைவருக்கும் சம்மன் அனுப்புவதாகவும் அவர்கள் அனைவரும் செப்டம்பர் மாதம் 9-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

வெளி ஊர்கள் மற்றும் வெளி மாநிலங்களில் உள்ளவர்களுக்கு சம்மன்களை சி.பி.ஐ. காவல்துறை வழங்கவும் உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 9-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து