முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை ஐகோர்ட் நீதிபதியாக அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி ஷமீம் அகமது பொறுப்பேற்பு

திங்கட்கிழமை, 30 செப்டம்பர் 2024      தமிழகம்
Shamim-Ahmed 2024-03-30

சென்னை, அலகாபாத் ஐகோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றிய நீதிபதி ஷமீம் அகமது சென்னை ஐகோர்ட் நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

அலகாபாத் ஐகோர்ட்டில் நீதிபதியாக பதவி வகித்த ஷமீம் அகமதுவை, சென்னை ஐகோர்ட்டுக்கு இடமாற்றம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டிருந்தார். அதன்படி, சென்னை ஐகோர்ட்டில் நேற்று காலை நடந்த பதவியேற்பு விழாவில் நீதிபதி ஷமீம் அகமதுவுக்கு, ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிகழ்வில் ஐகோர்ட்டின் சக நீதிபதிகள், மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்கள், மூத்த வழக்கறிஞர்கள்  கலந்து கொண்டனர். இதையடுத்து நீதிபதி ஷமீம் அகமது சென்னை ஐகோர்ட்டின் புதிய நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனால், சென்னை ஐகோர்ட்டில் தற்போதுள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. இருந்தும், 8 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. 

நீதிபதி ஷமீம் அகமது, அலகாபாத்தில் கடந்த 1966-ம் ஆண்டு பிறந்தவர். சட்டப்படிப்பை முடித்து 1993-ம் ஆண்டு வழக்கறிஞராக பணியைத் தொடங்கிய அவர் 2019-ம் ஆண்டு அலகாபாத் ஐகோர்ட்டில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

சென்னை ஐகோர்ட் நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட ஷமீம் அகமதுவை, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ். அமல்ராஜ் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் வரவேற்று பேசினர். பின்னர் நீதிபதி ஷமீம் அகமது ஏற்புரையாற்றினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து