முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ. 22.69 கோடியில் 25 தாழ்தள பேருந்துகள்: அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

புதன்கிழமை, 9 அக்டோபர் 2024      தமிழகம்
Sivashankar 2024-10-09

Source: provided

சென்னை : மாநகர போக்குவரத்துக்கழகத்துக்கென கொள்முதல் செய்யப்பட்ட 25 தாழ்தள பேருந்துகளை போக்குவரத்துத் துறை அமைச்சர்  சிவசங்கர், ஜெர்மன் துணைத் தூதர் மைக்கேலா குச்லர் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர்.

சென்னையில் மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு 352 தாழ்தள பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் பல கட்டமாக இது நாள் வரை ரூ.170.60 கோடியில் 188 தாழ்தள பேருந்துகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், ஜெர்மன் வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் ரூ.22.69 கோடி மதிப்பீட்டில் அடுத்தக்கட்டமான 25 பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. 

இவற்றைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி சென்னை, பல்லவன் சாலையில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற போக்குவரத்துத் துறை அமைச்சர்  சிவசங்கர், ஜெர்மன் துணைத் தூதர் மைக்கேலா குச்லர் ஆகியோர் கொடியசைத்து பேருந்துகளைத் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் பேருந்தில் சிறிது தூரம் பயணித்தனர்.

இந்நிகழ்வில், மைக்கேலா குச்லர் பேசும் போது, நான் தொடர்ச்சியாக மாநகர பேருந்துகளில் பயணிக்கிறேன். இங்கு பெண்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள கட்டணமில்லா பயண சேவையை, பெண்ணிய பார்வையில் பாராட்டுகிறேன். 

மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட அனைவரும் பயன்பெறும் வகையில் தாழ்தள பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 5 சி வழித் தடத்தில் தாழ்தள பேருந்துகளை இயக்குமாறு கோரிக்கை விடுக்கிறேன் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து