முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை: ஜோ ரூட் புதிய சாதனை

செவ்வாய்க்கிழமை, 8 அக்டோபர் 2024      விளையாட்டு
Joe-Rudd 2024-10-08

Source: provided

லண்டன் : டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

முதலாவது டெஸ்ட்... 

2022-2023 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த இங்கிலாந்து அணி மீண்டும் ஒரு தொடரை வெல்லும் முனைப்பில் களமிறங்கியுள்ளது. இவ்விரு அணிகளும் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி பாகிஸ்தானின் முல்தானில் நேற்று முன்தினம் (அக்.7) தொடங்கியது. சொந்த மண்ணிலேயே வெற்றி பெறுவதற்கு தடுமாறிவரும் பாகிஸ்தான் அணி, வங்கதேசத்துக்கு எதிரான தொடரை 2-0 என்ற கணக்கில் தோற்று பறிகொடுத்தது. ஷான் மசூத் தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு இங்கிலாந்தை சமாளிப்பது சவாலான ஒன்றாக இருக்கிறது.

மேலும் ஒரு சாதனை...

இங்கிலாந்து அணியின் தொடர்ச்சியான வெற்றிகளுக்கு ஜோ ரூட் முக்கிய அடித்தளமாகவுள்ளார். இவர் தொடர்ச்சியாக ரன்கள் குவித்து வருவதுடன் பல சாதனைகளையும் படைத்து வருகிறார். ஜோ ரூட் மேலும் ஒரு சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார். அவரது அந்தச் சாதனையை எட்ட 27 ரன்கள் தேவையாக இருந்தன. அந்தவகையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையில் 5000 ரன்களை கடந்தவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் ஜோ ரூட்.

59 போட்டிகளில்... 

பாகிஸ்தானுக்கு எதிரானப் போட்டியில் அவர் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். அவர் 27 ரன்கள் எடுத்தபோது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையில் 5000 ரன்களை கடந்தார். இதுவரை 59 போட்டிகளில் விளையாடி 16 சதங்கள் உள்பட 5005* ரன்கள் குவித்துள்ளார்.

கட்டாயத்தில்....

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் பாகிஸ்தானுக்கு இந்தத் தொடர் மிகவும் முக்கியமானது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் விளையாடுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும், அவர்கள் தொடரிலிருந்து இன்னும் வெளியேறவில்லை. மேலும் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் டெஸ்ட் தொடரை அவர்களால் வெல்ல முடிந்தால் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பில் நீடிக்கலாம்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக ரன்கள்:

1. ஜோ ரூட்: 59 டெஸ்டில் 5005* ரன்கள்.

2. மார்னஸ் லாபுசேன்: 45 டெஸ்டில் 3904 ரன்கள்.

3. ஸ்டீவ் ஸ்மித்: 45 டெஸ்டில் 3486 ரன்கள்.

4. பென் ஸ்டோக்ஸ்: 48 டெஸ்டில் 3101 ரன்கள்.

5 - பாபர் அசாம்: 52 டெஸ்டில் 2375 ரன்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து