முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி பிரம்மோற்சவத்தின் 6-ம் நாள்: அனுமந்த வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி

புதன்கிழமை, 9 அக்டோபர் 2024      ஆன்மிகம்
Tirupati 2023-09-19

Source: provided

திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தின் 6-ம் நாளான நேற்று காலை மலையப்ப சுவாமி அனுமந்த வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

 திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை மற்றும் இரவில் மலையப்ப சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 

பிரம்மோற்சவத்தின் 5-ம் நாளான நேற்று முன்தினம் மாலை முக்கிய வாகன சேவையான கருட சேவை உற்சவம் நடந்தது. இதில் மலையப்ப சுவாமி தங்க, வைர, பச்சை மரகதம் கற்கள் பதிக்கிப்பட்ட ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு தங்க கருட வாகனத்தில் மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

அப்போது மாடவீதியில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா’ என பக்தி முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கருட சேவையில் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர்.

பிரம்மோற்சவத்தின் 6-ம் நாளான நேற்று காலை ரங்கநாதர் மண்டபத்தில் மலையப்பசுவாமி அனுமந்த வாகனத்தில் ராமர் அலங்காரத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. 

தொடர்ந்து அனுமந்த வாகனத்தில் 4 மாட வீதியில் பவனி வந்த மலையப்பசுவாமியை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.   வீதி உலாவின் போது தமிழகம், ஆந்திரா, கேரளா, அரியானா, அசாம், கர்நாடகா, பஞ்சாப், ராஜஸ்தான், தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. 

மேலும் சுவாமியின் பல்வேறு அவதாரங்களில் வேடம் அணிந்து பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து நேற்று மாலை  ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்பசுவாமி 32 அடி உயரமுள்ள தங்க ரதத்தில் வீதியுலா நடைபெற்றது. தங்க ரதத்தை பெண் பக்தர்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்து வருவார்கள் என்பது சிறப்பு வாய்ந்தது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து