முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியானா மாநில முதல்வராக வரும் 12-ம் தேதி பதவியேற்கிறார் சைனி

புதன்கிழமை, 9 அக்டோபர் 2024      இந்தியா
Nayab-Singh-Saini 2024-10-0

Source: provided

சண்டிகர் : அரியானா மாநில முதல்வராக வரும் 12-ம் தேதி நயாப் சிங் சைனி பதவியேற்க உள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை அரியானா சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. பெற்று 3-வது முறையாக அரியணை ஏறுகிறது. கருத்துக்கணிப்புகளை புறம்தள்ளி பா.ஜ.க. அமோகமாக வெற்றி பெற்றுள்ளது.

அரியானா தேர்தலில் லாத்வா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மேவா சிங்கை 16,054 ஓட்டுகள் வித்தியாசத்தில் நயாப் சிங் சைனி வீழ்த்தினார். தேர்தலுக்கு இரண்டு மாதம் முன்புதான் முதல்வராக இருந்த மனோகர்லால் கட்டாருக்கு பதிலாக நயாப் சிங் சைனி பதவியில் அமர வைக்கப்பட்டார்.

கட்டார் முதல்வராக இருந்த காலத்தில் அவர் மீதான எதிர்ப்பு மற்றும் ஆட்சிக்கு எதிரான மக்களின் மனோநிலையை கருத்தில் கொண்டு முதல்வராக அமர வைக்கப்பட்டவர் நயாப் சிங் சைனி. தேர்தலுக்கு முன்பாக முதல்வராக பதவியில் இருந்த போது மேற்கொண்ட சில நடவடிக்கைகளே வெற்றியை பெற்று தந்திருக்கிறது.

அக்னி வீர் திட்டத்தில் வேலைவாய்ப்பு, தொழில்களுக்கான வாய்ப்புகளை அனுமதிக்கும் வகையிலான கொள்கையை கொண்டு வந்தவர் நயாப் சிங் சைனி. பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையில் அவர் எடுத்த நடவடிக்கைகள் போன்றவையே வெற்றிக்கு காரணமாக இருந்தன. 

இதனால் நயாப் சிங் சைனியையே மீண்டும் முதல்வராக பதவியில் அமர்த்த பா.ஜ.க. தலைமை முடிவு எடுத்துள்ளது. கூடிய விரைவில் உரிய அறிவிப்பு வெளியாகும் என்று கட்சி தொண்டர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து