முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உதவி வேளாண்மை அலுவலர்கள் 83 பேருக்கு பணி நியமன ஆணை : முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

புதன்கிழமை, 9 அக்டோபர் 2024      தமிழகம்
CM-1 2024-10-09

Source: provided

சென்னை : 83 உதவி வேளாண்மை அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். 

வேளாண்மைத் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்திடும் வகையில் தமிழகத்தின்  வரலாற்றில் முதல்முறையாக, வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து,  உழவர்களின் நலனை பேணும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. 

வேளாண்துறை சார்ந்த பணிகளை விரைந்து மேற்கொள்ளவும், அரசின் வேளாண் திட்டங்கள் கடைக்கோடி விவசாயிகளுக்கும் சென்றடையும் வகையிலும், வேளாண்மை - உழவர் நலத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 

அந்த வகையில், தி.மு.க. அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இந்நாள்வரை வோண்மை – உழவர் நலத்துறையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக, பல்வேறு வகையான தொழில்நுட்ப மற்றும் அமைச்சுப் பணிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட 1,714 நபர்களுக்கும், பணிக்காலத்தில் இயற்கை எய்திய பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் 223 நபர்களுக்கும், என மொத்தம் 1,937 நபர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 

அதன் தொடர்ச்சியாக, நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் உதவி வேளாண்மை அலுவலர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட  83 பேருக்கும், வேளாண்மை துறையில் பணிபுரிந்து பணிக்காலத்தில் இயற்கை எய்திய பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 42 பேருக்கும், கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், ஆய்வக உதவியாளர், அலுவலக உதவியாளர் மற்றும் காவலர் ஆகிய பணியிடங்களுக்கும் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து