முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரானின் அணு நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தாது : அமெரிக்கா தகவல்

புதன்கிழமை, 16 அக்டோபர் 2024      உலகம்
Joe-Biden-Benjamin 2023-10-

Source: provided

வாஷிங்டன் : ஈரானின் அணு நிலையம் தாக்குதல் மற்றும் கச்சா எண்ணெய் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என்று இஸ்ரேல் உறுதியளித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ஈரான், இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

இதற்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் தயாராகி வருகிறது. இதில் ஈரானின் அணு நிலையங்கள் மற்றும் எண்ணெய் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்தது.

இதற்கிடையே அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, `சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஜோபைடன்-இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இடையேயான பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் ஒரு உறுதியை அளித்துள்ளது.

ஈரானின் அணு நிலையம் தாக்குதல் மற்றும் கச்சா எண்ணெய் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என்று உறுதியளித்துள்ளது. ஈரானின் ராணுவ தளங்களை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து