முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாழ்வான பகுதிகளில் அத்தியாவசிய பொருள் வழங்க டிரோன்கள் தயார் : அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

புதன்கிழமை, 16 அக்டோபர் 2024      தமிழகம்
KN-Nehru 2024-10-16

Source: provided

சென்னை :  சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் படகுகள் செல்ல முடியாத சூழ்நிலையில் மழைநீர் தேங்கியுள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக கருடா, கொத்தாரி மற்றும் டிராகோ என்ற 3 டிரோன்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த டிரோன்களின் சோதனை முன்னோட்டத்தை அமைச்சர் கே.என்.நேரு நேற்று ஆய்வு செய்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு , சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் படகுகள் செல்ல முடியாத சூழ்நிலையில் மழைநீர் தேங்கியுள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை டிரோன் மூலம் வழங்குவதற்கான சோதனை முன்னோட்டத்தினை ரிப்பன் கட்டட வளாகத்தில் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வடகிழக்கு பருவழையினை முன்னிட்டு, சென்னை மாநகராட்சி பகுதிகளில் படகுகள் செல்ல முடியாத சூழ்நிலையில் மழைநீர் தேங்கியுள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக கருடா, கொத்தாரி மற்றும் டிராகோ என்ற 3 டிரோன்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த டிரோன்களில் பால், பிரட் மற்றும் மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட 5 கிலோ முதல் 10 கிலோ வரையிலான அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்ல முடியும்.

மேலும், இந்த டிரோன்கள் 40 மீ. உயரத்தில் 2 கி.மீ. தூரம் வரை பறக்கும். இந்த டிரோன்களின் செயல்பாடுகள் சோதனை முன்னோட்டத்தின் அடிப்படையில்  பரிசோதிக்கப்பட்டது. 

இந்த ஆய்வின்போது, மேயர் ஆர். பிரியா, துணை மேயர்  மகேஷ்குமார், ஆணையர்  குமரகுருபரன், கூடுதல் ஆணையர் (சுகாதாரம்) டாக்டர்  ஜெய சந்திர பானு ரெட்டி, துணை ஆணையர்கள் சிவகிருஷ்ணமூர்த்தி, (பணிகள்), பிருதிவிராஜ், வருவாய் (ம) நிதி) மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து